கோவில்பட்டியில் அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்


பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நகரசெயலாளர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன்,மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவி சத்யா,அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் முருகேஸ்வரி, வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி,சங்கர் கணேஷ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,அமைப்புசாரா ஓட்டுனர் அணி லட்சுமணபெருமாள், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன்,நகர அவைத்தலைவர் அப்பாசாமி,ஆவின் தலைவர் தாமோதரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ்,மகளிர் அணி ரேவதி, கோமதி,ஜெயந்தி, ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி, வண்டானம் கருப்பசாமி,போடுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


