பள்ளி மாணவர்களுக்கான கலை கல்வித் திருவிழா

புதூர் காமன் எம்ப்வர்மென்ட் சர்வீஸ் சொசைட்டி மற்றும் சாய் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கலை கல்வித் திருவிழா நாகலாபுரம் கம்மவார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழகத்தில் உள்ள 28க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் 165 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் பொறியியலில் சேரும் முறைகள் கல்வி கட்டணம் சலுகைகள் வங்கி கடன் பெறுவது பற்றிய ஆலோசனைகள் அனைத்தும் தெரிந்து கொண்டனர்.
காமன் எம்ப்ளாய்மெண்ட் சர்வீஸ் சொசைட்டி நிர்வாகி கணேஷ்பிரபு வரவேற்புரை ஆற்றினார்.காமன் என்பவர்மெண்ட் சர்வீஸ் சொசைட்டி நிர்வாகி கேசவராஜன் தலைமை உரையாற்றினார்.
விழா ஏற்பாடுகளை ரங்கநாயகி வரதராஜ் என்ஜினியரிங் கல்லூரி உடற்கல்விகள் துறை பேராசிரியர் விஜயகுமார் தொகுத்து வழங்கினார்.ரமேஷ் நன்றிகூறினார்


