கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் ஈஸ்டர் கொண்டாட்டம்

Oplus_16908288
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர் )கொண்டாடப்பட்டது. 19-4-25 சனிக்கிழமை
இரவு10.30 மணி அளவில் திருப்பலி ஆரம்பமானது. இந்த வழிபாடானது திரு ஒளி வழிபாடு, இறைவார்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு என மூன்று விதமாக நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து உயிர்த்தெழும் காட்சி உன்னதங்களிலே ஓசன்னா பாட்டுபாட வாணவேடிக்கைகள், முழங்க இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது.
புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், உதவி பங்கு தந்தை அருண்குமார் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள். இறைமக்கள் கையில் பாஸ்கா மெழுகுவர்த்தி ஏந்தி ஞானஸ்தான உறுதிமொழி புதுப்பித்து கொண்டார்கள்.
திருப்பலி பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் மந்திரிக்கப்பட்டது. அதை இறை மக்கள் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர். இறை மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா(ஈஷ்டர்) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இன்று 20-4-25 காலை திருத்தலத்தில் 8 மணிக்கு திருப்பலி நடைபெற்றது இதே போல் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா திருப்பலி ஆனது அனைத்து கிளை கிராமங்களிலும் நடைபெற்றது.


