கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் பாண்டவர்மங்கலம் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க. தமிழரசன் தலைமை தாங்கினார்.கோவில்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முகாமை தொடங்கி வைத்தார்.
டாக்டர் மஞ்சு தலைமையிலான மருத்துவக்குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர்க்கு கண் பரிசோதனை செய்தார். 12 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக்குமார், ஜெகன், ஏஐடியுசி உத்தண்டராமன், ஆவல்நத்தம் லட்சுமணன், அதிமுக இணை செயலாளர் செண்பகம், ஒளவையார் செல்வம், மருத்துவமனை ஊழியர்கள் வீரமணி, பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.


