கோவில்பட்டி அருகே புளியங்குளம் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; துரை வைகோ
கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஏ.பி.ஏ.சி. நடுநிலைப்பள்ளியில் தனியார் தொழிற்சாலையின் தொழிலக சமுக பங்களிப்புத் திட்டம் மற்றும் கிராம மக்கள் சார்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது. செமிக்ரோமேடிக் தொழிற்சாலை அதிகாரி யோகசுந்தரம் தலைமை தாங்கினார். ஸ்ரீவாரி அலாய்ஸ் நிர்வாக இயக்குநர் அசோகன் முன்னிலை வகித்தார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளிக்கட்டிடத்தை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. […]