தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அழகுநாச்சியார் புரத்தில் இருந்து இன்று காலை தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குசாலையில் நாற்று அறுப்பு பணிக்காக 12 பெண்கள் சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். இந்த வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னகுருசாமி மகன் காளி மகராஜன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் எப்போதுவென்றான் பாலம் அருகே வந்தபோது முன்னால் காற்றாலை இறக்கைகளை ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவ்வழியே வந்த டிராவல்ஸ் வேன், சரக்கு வாகனம் மீது […]
தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு இன்று காலை கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் தேர்வில் கலந்து கொண்டனர் இவர்களில் 21 வீராங்கனைகள் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் தேர்வு குழு உறுப்பினர்களான காமராஜ் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் ஆக்கி யூனிட் ஆப் […]
அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை முதல் குமரி வரை இந்து ஸ்வாமிமான் யாத்திரை இந்துக்களின் விழிப்புணர்வு யாத்திரை கடந்த 25-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த யாத்திரை நேற்று மாலை கோவில்பட்டி வந்தடைந்தது. தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் திடலில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அர்ச்சகர் பேரவை மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணசர்மா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைத் தலைவர் சங்கர் ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் […]
கோவில்பட்டி அருணாசல பேட்டை தெருவில் நூடார் உறவின் முறைக் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உருவாக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவிலின் தினசரி பூஜைகள் விவரம் அறிவிக்கபட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- காலை 5-30 மணி- நடைதிறப்பு காலை 6 மணி- திருப்பள்ளியெழுச்சி காலை 9- மணி -கால சந்தி பூஜை பகல் 11-50 மணி- உச்சி கால […]
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து நடத்திய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் […]
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இவர்கள் 2 பேரும் 2-வது முறையாக அமைச்சர் பதவியை இழந்துள்ளனர். செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரிடம் இருந்த துறைகள் 3 அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கூடுதலாக மின் துறை வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி துறைஅமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சரான […]
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பூரணம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள், அடிக்கல் நாட்டு பணியுடன் நிறுத்தப்பட்டுள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பணிகளை தொடங்கி வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:- : பூரணம்மாள் காலனியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் நாங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறோம். […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தை சேர்ந்த தனுஷ்லாஸ் தனது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் மொத்தம் 6 பேருடன் நேற்று மாலை காரில் நாகர்கோவிலுக்கு சென்றார். நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளியூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வந்த கார் தனுஷ்லாஸ் கார் மீது மோதியது. இதில் இரண்டு கார்களும் நொறுங்கின. கோர விபத்தில் தனுஷ்லாஸ் உள்பட குடும்பத்தினர் 6 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர். எதிரே வந்த காரில் இருந்த கூடங்குளத்தை சேர்ந்த மெல்கிஸ் […]
உணவே மருந்தாக இருந்த காலம் போய் உணவே உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவாக இன்று மாறிவருகிறது. அந்த வகையில் இன்றைய இளைய தலைமுறையினரால் அதிகமாக ஈர்க்கப்பட்ட உணவுவகைகளுக்கு( தந்தூரி, ஷவர்மா சான்ட்விச் பர்கர் போன்ற அன்னிய நாட்டு உணவுகளுக்கு) சைடிஸ்ஸாக உள்ள மயோனனஸ், வயிற்றுவலி , வாந்தி போன்ற பல்வேறு உடல் உபாதைகள் எற்படுத்தக்கூடிய தாக உள்ளது.. பச்சை முட்டையின் மஞ்சள்கரு, எண்ணெய் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சம்பழ சாறு கொண்டு தயாரிக்கபடுகிறது.முட்டையில் உள்ள புரதம் எண்ணெய் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 587 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு […]