தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை மாதாந்திர வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது.. தென்காசியில் இருந்து குத்துக்கல் வலசை செல்லும் வழியில், எபினெசேர் டைல்ஸ் அருகில் கே.எப்.சி. பின்புறம் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய […]
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மத்திய அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் […]
சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது பழமொழி. சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது முதுமொழி! ஆச்சரியமாக இருக்கிறதா? இதை 2,200 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் செய்து காட்டினார். அவர், எரட்டோஸ்தனிஸ். பண்டைய கிரேக்கத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரின் நூலக தலைமை நூலகர் இவர். ஒரு நாள் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படித்த ஒரு தகவல் அவரை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அன்று அலெக்சாண்ட்ரியா அருகே சைன் நகரில் கிணறுகளில் நண்பகல் நேரத்தில் […]
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், குடியரசு தலைவருக்கு அனுப்புவதை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களும், கவர்னரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது..நீதிபதிகள் […]
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர் எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது சிவன் கோவில் மட்டுமல்ல எந்த ஒரு கோவிலில் இருந்தும் நீங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் உங்கள் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டி மறவர் காலனி சுடுகாடு அருகே கருப்பசாமி என்பவர் வீட்டில் கடத்தலுக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்பிரிவு போலீசுக்கு த தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசியை வாகனத்தில் ஏற்றி […]
ஒரு மாதமாக தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கம், கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ,560-க்கும், பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. 4-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.8 ,400-க்கும், ஒரு பவுன் ரூ.1,280 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கலால் வரி உயர்த்தப்பட்டபோதும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் […]
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.9.23 முதல் செயல்பட்டு வருவதாக சொல்லபபடுகிறது. இந்நிலையில் வாடகை கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 17 மாதங்களாக கந்தசாமிக்கு வாடகை பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் அதிகாரிகள் தராமல் அலட்சியம் காட்டினர். மேலும் இது தொடர்பாக கந்தசாமி கடந்த 3 ம் தேதி கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருந்த […]
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி சென்னையில் 24ம் […]