தென்காசியில் 17-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை மாதாந்திர வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது..
தென்காசியில் இருந்து குத்துக்கல் வலசை செல்லும் வழியில், எபினெசேர் டைல்ஸ் அருகில் கே.எப்.சி. பின்புறம் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் கண்டிப்பாக கீழ்காணும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து SUBMIT செய்த பின் வேலைவாய்ப்பு அலுவலக டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும்.
Step:1 கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/xznQ7xT2W9iVhNrg9
Step:2 கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ பயன்படுத்தி வேலைவாய்ப்பு அலுவலக Telegram Channel-ல் இணையவும்.
https://t.me/Tenkasiemployment
மேலும்
https://www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் வேலை நாடுநர்கள் CANDIDATE LOGIN -ல் தங்களது சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதுவரை பதிவு செய்யாத வேலை நாடுநர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தங்கள் பெயரை பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.
மேலும் தகவலுக்குதென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.


