• April 20, 2025

`சிவன் சொத்து குல நாசம்’ உண்மையான விளக்கம்

 `சிவன் சொத்து குல நாசம்’ உண்மையான விளக்கம்

சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர்

எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது

சிவன் கோவில் மட்டுமல்ல எந்த ஒரு கோவிலில் இருந்தும் நீங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் உங்கள் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது தான் சாஸ்திர நியதி. கோவில் சொத்து மேல் ஆசைப்படுபவர்கள் உடைய சந்ததிகள் அடியோடு நாசமாகி சீர்குலையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே கையை வைத்த பஸ்மாசுரன் உடைய நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும்

உண்மையில் சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த பிரசாதங்களை வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டே வந்தால், ஈசனுடைய அருள் மற்றும் பாதுகாப்பு உங்கள் வீட்டிற்கு அரணாக அமையும். இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தன் பலத்தை இழந்து வெளியேறிவிடும்

பழமொழியின் உண்மை அர்த்தம் தெரியாத காரணத்தால் இந்த நன்மைகளை எல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது

அனைத்து விதமான ஆசைகளையும் அடக்கி, பந்த பாசங்களை அறுத்து, முழுமையாக தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சித்தர்கள் அக்காலத்தில் அதிக வித்தைகளை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர்

சித்தர் எனும் மகா புருஷர்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து யோகப் பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தியை பெற்றார்கள் இதற்கு அந்த ஆண்மகன் தன்னுடைய சுக்கிலத்தை அடக்கி பூமியை நோக்கி விழாமல், தன்னுடைய ஆன்ம பலத்தால், உச்சந்தலையை நோக்கி விந்துவை உயர செய்து உள்நாக்கில் விழ வைப்பார்கள் இப்படி அவன் செய்தால் அவனுடைய குலமே அவனோடு முடிந்துவிடும்

இதனை செய்வதன் மூலம் அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும் சித்தி பெற்ற ஒருவரே சித்தன் ஆகிறான் முற்றும் துறந்து உச்சி முதல் பாதம் வரை அடக்கி அஷ்டமா சித்திகளை பெற்று ஞானத்தை அடைந்து மோட்சம் பெறும் சித்தர்கள் உடலால் அழிந்தாலும் ஆன்மா பல நூறு ஆண்டுகளுக்கு அழியா நிலையை பெறுகிறது

இதைத்தான் சிவன் சொத்து குல நாசம் என்று கூறி வைத்தனர் சிவனுடைய சொத்து மட்டுமல்ல, எந்த கடவுளின் சொத்தாக இருந்தாலும் அதனை அடைய நினைப்பவர்களுக்கு வம்சம் நாசமடையும் சிவன் கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வருவதால் எந்த ஒரு ஆபத்தும் நேர போவதில்லை மற்ற கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்கள் போலவே சிவன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களும் வீட்டிற்கு நன்மைகளை மட்டுமே வழங்கும்

எந்த ஒரு தீங்கையும் இழைத்து விடாது. சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதியை, வீட்டின் நான்கு மூலைகளிலும் தூவிவிட்டால் போதும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி தெய்வ சக்தி ஊடுருவி நேர்மறை ஆற்றல் பெருகும் தினமும் சிவன் கோவில் விபூதியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெற்றியில் வைத்துக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனமும் அமைதி அடைந்து நிம்மதியான தூக்கம் பெறுவீர்கள்


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *