• May 20, 2025

Month: April 2025

கோவில்பட்டி

“சீன லைட்டர்களை இந்தியாவில் முழுவதுமாக தடைசெய்ய  வேண்டும்”; மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழு

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று காலை  நடைபெற்றது. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆவடி இரா.அந்திரிதாஸ் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார். கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா ஆகியோர் உரையாற்றினார்கள். கூட்டத்தில் […]

கோவில்பட்டி

விருதுநகரில் விபரீதம்:  ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

விருதுநகர் கே.வி.எஸ்.பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை நேரத்தில் இப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய இந்த பொருட்காட்சியில் நிறைய ராட்டினங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்காட்சிக்கு குடும்பத்துடன் மக்கள் வந்து செல்கிறார்கள்/ நேற்று இங்குள்ள ஒரு ராட்சத ராட்டினத்தில், கவுசல்யா என்ற இளம்பெண் தனது ஏறி அமர்ந்து இருந்தார், இந்த ராட்டினம் மேலும் கீழுமாக சுற்றி வந்து பின்னர் மேல் பகுதியில் தலைகீழாக மூன்று முறை சுற்றும். இது பயங்கர திரில் அனுபவமாக […]

செய்திகள்

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்த கூட்டணி பாஜக – அதிமுக; கனிமொழி எம்.பி பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கூறியதாவது:-  இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணிக்கு இடமே கிடையாது என்று சொன்ன எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல் தன்னுடைய கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு  மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். இதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  பல்வேறு சமயங்களில் பாஜக கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் 

கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் மற்றும் சங்கரலிங்கபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.அமமுக துணை பொதுச்செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா நீர் மோர் பந்தலை திறந்து வைத்து,பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள்,நீர் மோர் வழங்கினார். விழாவில் மாவட்ட செயலாளர் பூலோகபாண்டியன், அமைப்புச் செயலாளர் சிவபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கணபதி பாண்டியன், மகேந்திரன், ஈஸ்வரபாண்டியன், விஜயபாஸ்கரன், மாவட்ட நிர்வாகிகள் அமிர்தராஜ் பாண்டியன், கிளவிபட்டி குமார் பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு  […]

கோவில்பட்டி

சிவகாசி என்ஜினீயரிங் கல்லூரி விளையாட்டு விழா

சிவகாசி சல்வார்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் துணை சேர்மன் பிருந்தா ராகவன் தலைமை தாங்கினார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அர்ஜுனா விருது பெற்ற மனத்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி,வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டு […]

கோவில்பட்டி

நெடுஞ்சாலை துறை கோவில்பட்டி கோட்ட பொறியாளர் அலுவலகம் தொடக்க விழா

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டப்பொறியாளர் அலுவலகம் தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதை  தொடர்ந்து கோவில்பட்டியில் இன்று  மாலை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை கோவில்பட்டி கோட்டப்பொறியாளர் அலுவலகம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி கோட்டப்பொறியாளர் ஊ.ஆறுமுகநயினார் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து த.ஜெயராணி, கண்காணிப்பு பொறியாளர் (நெ) திருநெல்வேலி தொடக்க உரையாற்றி  விழாவை தொடங்கி வைத்தார் தூத்துக்குடி பாரளுமன்ற உறுப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 90 நலவாழ்வு மையங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் உள்ள 90 நலவாழ்வு மையங்களுக்கு கனிமவள நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தானியங்கி பகுப்பாய்வுக் கருவி, நெபுலைசர், ரத்த அழுத்த மானி, மைய விலக்கு சுழற்சிக் கருவி, ஹீமோகுளோபினோ மீட்டர், குளிர்சாதனப் பெட்டி, மருத்துவப் பெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 61 […]

கோவில்பட்டி

முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் 11 -ந் தேதி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் புணராவர்த்தன அஷ்டபந்தன நூதன சாலகோபுர மஹா கும்பாபிஷேக விழா  இன்று காலை தொடங்கியது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை  மங்கள இசை, திருமறை விகேநேச்வா பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன, மாலை 5.31 மணி முதல் இரவு […]

கோவில்பட்டி

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கயத்தாறு வட்டாரக்கிளையில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டி ஏ கே எஸ் சொர்ண மஹாலில் நடந்தது. விழாவுக்கு வட்டாரத் தலைவர் அழகுலட்சுமி தலைமை தாங்கினார்..காளியப்பன் லீலாவதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கலை உடையார்,மாவட்டத் தலைவர் செல்வராஜ்,கல்வி மாவட்டச் செயலாளர் ரவீந்திரராஜன், கல்வி மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், பணி நிறைவு பெறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு நலத்திட்ட உதவிகள்; கனிமொழி எம்.பி. வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்கள்,, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,18,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.54,02,670 மதிப்பிலான வரன்முறை பட்டாக்கள் வழங்கப்பட்டன, இவற்றை […]