விருதுநகரில் விபரீதம்: ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

விருதுநகர் கே.வி.எஸ்.பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை நேரத்தில் இப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய இந்த பொருட்காட்சியில் நிறைய ராட்டினங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பொருட்காட்சிக்கு குடும்பத்துடன் மக்கள் வந்து செல்கிறார்கள்/ நேற்று இங்குள்ள ஒரு ராட்சத ராட்டினத்தில், கவுசல்யா என்ற இளம்பெண் தனது ஏறி அமர்ந்து இருந்தார்,
இந்த ராட்டினம் மேலும் கீழுமாக சுற்றி வந்து பின்னர் மேல் பகுதியில் தலைகீழாக மூன்று முறை சுற்றும். இது பயங்கர திரில் அனுபவமாக இருக்கும். அது போல் சுற்றிய போது அதில் அமர்ந்து இருந்தவர்களில் ஒருவரான கவுசல்யா திடீரென மேலே இருந்து கீழே விழுந்து விட்டார்.
இந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. கீழே விழுந்தததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யா வேதனியில் துடித்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராட்டினத்தில் மேனுவல் லாக் செய்யாததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட ஊழியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மற்ற ராட்டினங்கள் பாதுகாப்பான முறையில் இருக்கிறதா> என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.


