கோவில்பட்டியில் 90 நலவாழ்வு மையங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் உள்ள 90 நலவாழ்வு மையங்களுக்கு கனிமவள நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தானியங்கி பகுப்பாய்வுக் கருவி, நெபுலைசர், ரத்த அழுத்த மானி, மைய விலக்கு சுழற்சிக் கருவி, ஹீமோகுளோபினோ மீட்டர், குளிர்சாதனப் பெட்டி, மருத்துவப் பெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 61 பயனாளிகளுக்கு ரூ.45.75 லட்சம் மதிப்பிலான இணையவழிப் பட்டாக்கள் வழங்கபட்டது.
மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி கருணாநிதி எம்.பி., கிராமப்புற மருத்துவ உபகரணங்களையும், பயனாளிகளுக்கு இணையவழிப் பட்டாக்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியர் மகாலட்சுமி,கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி,நகராட்சி ஆணையாளர் கமலா மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன்,ராதாகிருஷ்ணன்,முன்னாள் மாவட்ட துணை சேர்மன் மகாலட்சுமி சந்திரசேகர்,பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,ரமேஷ்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


