நெடுஞ்சாலை துறை கோவில்பட்டி கோட்ட பொறியாளர் அலுவலகம் தொடக்க விழா



கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டப்பொறியாளர் அலுவலகம் தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து கோவில்பட்டியில் இன்று மாலை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை கோவில்பட்டி கோட்டப்பொறியாளர் அலுவலகம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி கோட்டப்பொறியாளர் ஊ.ஆறுமுகநயினார் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து த.ஜெயராணி, கண்காணிப்பு பொறியாளர் (நெ) திருநெல்வேலி தொடக்க உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி பாரளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி புதிய கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் குத்துவிளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வாழ்த்துரை வழங்கினார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் செ.கடம்பூர் ராஜீ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
.விழா முடிவில் கோவில்பட்டி கோட்டப்பொறியாளர் (நெ) செ.ஜெகன்மோகன், நன்றி கூறினார்,புதிய கோட்டம் தொடக்க விழாவில் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர்கள். லெ.ரெத்தினபாபு, ப.ராஜபாண்டி மற்றும் அ.விஜய சுரேஷ்குமார் ,உதவிப்பொறியாளர்கள் மு.எபநேசர், க.சார்லஸ்பிரேம்குமார், ஜீ.ஹெப்சிபா ஜேன்ஸ். ஜீ.முத்துமுனிகுமாரி மற்றும் பா.திலிப்குமார், மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன்,ராதாகிருஷ்ணன்,முன்னாள் மாவட்ட துணை சேர்மன் மகாலட்சுமி சந்திரசேகர்,பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,ரமேஷ்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


