Month: January 2025

கோவில்பட்டி

அறுந்து கிடந்த மின் வயர் கழுத்தில் சிக்கி உயிரிழந்த கூலி தொழிலாளி

கயத்தாறு அருகே சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து தரையை நோக்கி தொங்கி இருந்தது‌  நேற்று அதிகாலையில் அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் கழுத்தில் தொங்கி கிடந்த மின்வயர் சிக்கிகொண்டது. அடுத்த வினாடி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் இந்த் துயர காட்சியை பார்த்து போலீசுக்கு தகவல் […]

சினிமா

திரிஷா அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் தொடர்வார்.

அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது.ஜோடி’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து […]

சினிமா

விஜய் நடிக்கும் கடைசி  படத்தின் பெயர் ‘ஜன நாயகன்’

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “தி கோட்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். இப்படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் ; ஆட்சியர் இளம்பகவத், தேசியகொடி ஏற்றினார்

இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது, சென்னையில் நடந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில்  கவர்னர் ஆர்,.என்.ரவி தேசிய கொடியேற்றினார். தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கக. இளம்பகவத் தேசியக் கொடி  ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் இளம்பகவத் ஏற்றுக்கொண்டார். பின்னர் […]

கோவில்பட்டி

தேசிய வரைபடம் கோலத்தில் சுதந்திரப் போராட்ட தலைவர்கள்  உருவத்தை  வரைந்து கல்லூரி மாணவிகள்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். கல்லூரி மாணவிகள் தேசிய வரைபடம்  கோலத்தில்  சுதந்திர போராட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ஆகியோரின் திருவுருவப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் குடியரசுதின கொடியேற்று விழா நிகழ்ச்சிகள்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு  கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில்  முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தேசியக் கொடியேற்றி,இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி,மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய,மகளிர் அணி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தலைமை தாங்கினார் ,நகர்மன்ற தலைவர் கருணாநிதி தேசிய […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மத்திய நகர்  அரிமா சங்கம் சார்பில் 6 கி.மீ.தூர மாரத்தான் ஓட்டப்பந்தயம்

கோவில்பட்டி மத்திய நகர்  அரிமா சங்கம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க செயலாளர் தலைமை தாங்கினார் பொருளாமார் பூபதி முன்னிலை வகித்தார். சங்கத்தலைவர் சுப்புராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள்  ஆளுநர் . பிரான்சிஸ் ரவி கலந்து கொண்டு தேசியகொடியை ஏற்றி வைத்தார்., 6 ஜிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார். மந்திதோப்பு ரோடு லயன்ஸ் சங்கத்தில் தொடங்கி கெச்சிலாபுரம் விலக்கு வரை  சென்று மீண்டும் லயன்ஸ் சங்கத்தில் முடிவடைந்தது. […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி;மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன்  தொடங்கி வைத்தார்

15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில் அனைவரும் தேசிய வாக்காளர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் , கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்கள் மற்றும் சுருக்கமுறை திருத்தத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் […]

செய்திகள்

தேசிய பசுமைபடை மாணவர்களுக்கான நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்விளக்க பயிற்சி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கழிவு மேலாண்மை,நீர் மேலாண்மை,தன் சுத்தம்,சுற்றுப்புற சுகாதாரம்,கழிவறை பயன்பாடு, நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால கணேசன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செயல்விளக்க பயிற்சியை தொடங்கி வைத்து […]