தேசிய பசுமைபடை மாணவர்களுக்கான நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்விளக்க பயிற்சி

 தேசிய பசுமைபடை மாணவர்களுக்கான நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்விளக்க பயிற்சி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கழிவு மேலாண்மை,நீர் மேலாண்மை,தன் சுத்தம்,சுற்றுப்புற சுகாதாரம்,கழிவறை பயன்பாடு, நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால கணேசன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செயல்விளக்க பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்,

நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரியங்காவு, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிகூட  முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் அய்யனார்,பாண்டி செல்வி ஆகியோர் திடக்கழிவு மேலாண்மையில் மக்கும் குப்பை மக்காத குப்பை அபாயகரமான குப்பைகள் சேகரித்தல், பயன்படுத்துதல் முறை குறித்தும்

சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன் தன் சுத்தம் மற்றும் கைகளை சோப்பு போட்டு கழுவும் முறை குறித்தும்,அறிவியல் இயக்க பொறுப்பாளர் ராமமூர்த்தி தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றுதல் குறித்தும்,சுற்றுச்சூழல் ஆர்வலர் சுரேஷ்குமார் தோட்ட செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது குறித்தும்,நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் .கழிவறை மற்றும் கை கழுவும் இடத்தினை சுத்தம் செய்தல் குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.

முடிவில் பள்ளி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார். பல்வேறு பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பசுமைபடை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *