நம் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மூலிகை பொருள்களில் மிக முக்கியமானது கருஞ்சீரகம். கலோஞ்சி என அழைக்கப்படும் கருஞ்சீரகம் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நீக்கும் வல்லமை கொண்டது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து பயன்படுத்தலாம். சமைக்கும்போது இந்த பொடியை மழைச்சாரல் போல கொஞ்சம் தூவி விட்டால் உடலுக்கு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். இதுவரை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் இனி நீங்கள் சமைக்கும்போது தினமும் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். […]
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு நாலட்டின்புதூர், இனாம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம், மூப்பன்பட்டி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த் நிலையில் , இலுப்பையூரணி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாமலும், இங்குள்ள விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை முறைப்படுத்தாமலும் கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட […]
கோவில்பட்டி வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி 1918 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்டதாகும். .2019 ஆம் ஆண்டு இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர்கள் 90.4% தேர்ச்சி பெற்றனர். கல்விச் செயல்பாடுகளுடன் பள்ளியில் அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும் கலைத்திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. கணிணி அறிவியல், கணித உயிரியல், வரலாறு, பொருளியல், இந்தியப் பண்பாடு, நுண்ணுயிரியல், மின்னியல், பொது இயந்திரவியல், வேளாண்மை ஆகிய பாடங்கள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பள்ளிக்கூடம் தொடங்கி […]
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தர்ப்பணம்: குப்பை சேகரிப்பு பணியில் சுற்றுப்புற சூழல் இயக்கத்தினர்
தை அமாவாசையை முன்னிட்டு நேற்று திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தர்ப்பணம் கொடுக்க நிறைய பேர் வழக்கம் போல் நேற்றும் வந்து இருந்தனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்டுத்தி விட்டு தேவையில்லாத பொருட்களை வீசி சென்று விடுவதை தடுக்கும் பணியில் சுற்றுப்புற சூழல் இயக்கத்தினர் ஈடுபட்டனர். இயக்கத்தின் ஆலோசகரும் சுற்றுப்புற சூழல் வல்லுனருமான .டாக்டர். எம.கார்த்திகேயன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர், இவர்கள் பக்தர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மக்கா […]
தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, தானம் அளிப்பது ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய கர்மாக்கள் குறைவதற்கும் இவைகள் மிக மிக அவசியமானவையாகும் தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டுடன், சிவ பெருமானையும் வழிபடுவது நல்லது. தை அமாவாசையில் நீர் நிலைகளுக்கு சென்று, சூரிய உதயத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அந்த வகையில் நேற்று தை அமாவசையை முன்னிட்டு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் […]
ரூ.7 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம்; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்
விளாத்திகுளம் வட்டம், சிப்பிகுளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7-கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளத்தினை முதலமைச்சர், மு.க/.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, ஜி.வி/மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் வள்ளி, மீன்வளத்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ண குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து ராமசுப்பு ,அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை […]
தூத்துக்குடி மாவட்டசப்ஜூனியர் சிறுமியர் கபடி அணிக்கான தேர்வு கயத்தாரில் நடைபெற்றது. அத்தேர்வில் கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவி தேவிஸ்ரீ தேர்வு ஆனார்/. இதை தொடர்ந்து அவர் தஞ்சாவூரில் நடைபெறும் மாநில சேம்பியன்சிப் கபடி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். மாணவி தேவிஸ்ரீயை தலைமை ஆசிரியை ஜேஸ்மின் ஜெனிபர் சொர்ணாபாய், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்
இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க..) உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும்… “நிறை மாத கர்பிணி” போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க்கவும்… பச்சைபூண்டு மிக மிக சிறந்தது! சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் “சமைத்து_சாப்பிடுதல்” […]