ரூ.7 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம்; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

விளாத்திகுளம் வட்டம், சிப்பிகுளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7-கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளத்தினை முதலமைச்சர், மு.க/.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து, ஜி.வி/மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் வள்ளி, மீன்வளத்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ண குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து ராமசுப்பு ,அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
