கோவில்பட்டி, முறப்பநாடு ஆற்றங்கரையில் தை அமாவாசை தர்ப்பணம்


தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, தானம் அளிப்பது ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய கர்மாக்கள் குறைவதற்கும் இவைகள் மிக மிக அவசியமானவையாகும்
தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டுடன், சிவ பெருமானையும் வழிபடுவது நல்லது. தை அமாவாசையில் நீர் நிலைகளுக்கு சென்று, சூரிய உதயத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
அந்த வகையில் நேற்று தை அமாவசையை முன்னிட்டு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் கூடினார்கள். கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் தெப்பகுளம் அருகில் வரிசையாக அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொட்டி வேத விற்பனர்கள் மந்திரம் சொல்ல தங்கள் முன்னோர் பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்தனர். காலையில் இருந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நிறைய பேர் வந்து இருந்தனர். அவர்களுக்கு தேவையான பூ மற்றும் பொருட்கள் விற்பனைக்காக திடீர் கடைகள் போடப்பட்டு இருந்தன.
இதே போல் மந்திரம் ஓதும் வேத விற்பனர்கள் மந்திரங்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வைத்தனர். ஆற்று மணலில் வரிசையாக அமர்ந்து ஒவ்வொருவரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
