தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தர்ப்பணம்: குப்பை சேகரிப்பு பணியில் சுற்றுப்புற சூழல் இயக்கத்தினர்
![தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தர்ப்பணம்: குப்பை சேகரிப்பு பணியில் சுற்றுப்புற சூழல் இயக்கத்தினர்](https://tn96news.com/wp-content/uploads/2025/01/6f883f04-e712-4b5e-a110-d344383859f8-1-850x560.jpeg)
தை அமாவாசையை முன்னிட்டு நேற்று திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தர்ப்பணம் கொடுக்க நிறைய பேர் வழக்கம் போல் நேற்றும் வந்து இருந்தனர்.
அவர்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்டுத்தி விட்டு தேவையில்லாத பொருட்களை வீசி சென்று விடுவதை தடுக்கும் பணியில் சுற்றுப்புற சூழல் இயக்கத்தினர் ஈடுபட்டனர்.
இயக்கத்தின் ஆலோசகரும் சுற்றுப்புற சூழல் வல்லுனருமான .டாக்டர். எம.கார்த்திகேயன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர், இவர்கள் பக்தர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மக்கா குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களின் சேவையை அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்,. இவர்களின் முயற்சியால் இந்த பகுதியில் திடீர் கடைகள் அமைப்பவர்கள் பாலிதீன் கவர்களை பயன்படுத்தாமல் பேப்பர் கவர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்,.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)