கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்; நாளை விளையாட்டு போட்டிகளுடன் தொடங்குகிறது

கோவில்பட்டி வ. உ. சி அரசு மேல்நிலைப் பள்ளி 1918 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்டதாகும்.
.2019 ஆம் ஆண்டு இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர்கள் 90.4% தேர்ச்சி பெற்றனர். கல்விச் செயல்பாடுகளுடன் பள்ளியில் அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும் கலைத்திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.
கணிணி அறிவியல், கணித உயிரியல், வரலாறு, பொருளியல், இந்தியப் பண்பாடு, நுண்ணுயிரியல், மின்னியல், பொது இயந்திரவியல், வேளாண்மை ஆகிய பாடங்கள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்பள்ளிக்கூடம் தொடங்கி 100 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இன்று( வியாழக்கிழமை) விளையாட்டு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெறுகிறது.
பள்ளியின் விளையாட்டு விழா நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தலைமை ஆசிரியர் ரெ.சேகர் வரவேற்று பேசுகிறார்.
மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை) ஜோ.பிரபாகரன் கொடி ஏற்றுகிறார். சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் . இயற்கை வேளாண்மை ஆயில் உழவு முறை நிறுவனர், பொன்னுச்சாமி பரஞ்ஜோதி ஒலிம்பிக் தீபம் ஏற்றுகிறார்.
விளையாட்டு போட்டிகளை .மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.கண்ணதாசன் தொடங்கி வைக்கிறார். உடற்கல்வி இயக்குநர் சி.ஆனந்த பிரபாகரன் நன்றி கூறுகிறார்.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா தொடங்குகிறது.தலைமை ஆசிரியர் . ரெ.சேகர் தலைமை தாங்குகிறார். முதன்மை கல்வி அலுவலர், து.கணேஷ் மூர்த்தி. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை), ஜோ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகிறார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .க.இளம்பகவத் கோவில்பட்டி கோட்டாட்சியர் .க.மகாலட்சுமி , நகர்மன்ற தலைவர் ,. கா.கருணாநிதி அவர்கள் நகர்மன்ற தலைவர். கோவில்பட்டி. இயற்கை வேளாண்மை ஆயில் உழவு முறை நிறுவனர், பொன்னுச்சாமி பரஞ்ஜோதி .டாக்டர் .சீனிவாசன் , விநாயகா ஜி. .ரமேஷ், அவர்கள் மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை சந்திரசேகர் , மாவட்ட கல்விக்குழு தலைவர் Tதங்கமாரியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விழாவில் நகரின் முக்கிய பிரமுகர்கள், இப்பள்ளி முன்னாள், இன்னாள் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
