கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: இலுப்பையூரணி ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்
![கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: இலுப்பையூரணி ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2025/01/52c7316b-cd95-4b05-997b-9b70de1d3ff8-850x560.jpeg)
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு நாலட்டின்புதூர், இனாம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம், மூப்பன்பட்டி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த் நிலையில் , இலுப்பையூரணி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாமலும், இங்குள்ள விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை முறைப்படுத்தாமலும் கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாமஸ் நகர் விலக்கு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகராட்சியுடன் இணைப்பதால் இலுப்பையூரணி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் பெற முடியாது. ஊராட்சியில் உள்ள குடியிருப்பு நிலங்களை வட்டாட்சியர் மூலம் அளவை மேற்கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அதுவரை எங்கள் பகுதிகளை நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட கூசாலிபட்டி, பூசாரிபட்டி, மறவர்காலனி, தாமஸ் நகர், வடக்கு இலுப்பையூரணி,சண்முகா நகர் கிராம மக்கள் மற்றும் மகளிர் தலைவி தமிழ்ச்செல்வி,ஊர்தலைவர் கோதண்டராமன்,சண்முகையா, அங்குசாமி, அய்யாசாமி, சின்னத்துரை, பாலமுருகன் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)