Month: November 2024

செய்திகள்

சபரிமலையில் 18-ம் படி மீது நின்று குரூப் போட்டோ எடுத்த போலீசார்: விசாரணை

சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்வதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே 18 படிகள் வழியாக சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சபரிமலையின் மேல் சாந்தி மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினருக்கு மட்டுமே. இதில் விதிவிலக்கு உண்டு. இதற்கிடையே, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில், அவர்களை படிகளில் ஏற்றி விடுவதற்கான பணிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பனுக்கு […]

கோவில்பட்டி செய்திகள்

2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: கோவில்பட்டி தாலுகா அலுவலக பணிகள் முடங்கின

3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கப்பட எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 2 வது நாளாக நடைபெற்றது.கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு […]

செய்திகள்

உத்தரப்பிரேதசத்தில் கார் மீது லாரி மோதியதில் 4 டாக்டர்கள் பரிதாப பலி

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி தடுமாறியது. அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 டாக்டர்கள் உட்பட ஒரு லேப் டெக்னீசியன் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கன்னாஜ் மாவட்டம் […]

சினிமா

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ”நயன்தாரா பியோன்ட் தி பேரி டேல்” என்ற பெயரில் ஆவணப்படமாக கடந்த 18-ம் தேதி வெளியானது. படத்தில், ‘நானும் ரவுடிதான்’ பட பாடல் காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் என்.ஓ.சி சான்று கோரினர். ஆனால், அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. 2 ஆண்டுகளாக பதில் சொல்லாமல், என்.ஓ.சி சான்றும் தராமல் இருந்ததால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா, தனுஷை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார். ‘நானும் […]

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி முதலமைச்சரும் தந்தையுமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாயாரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலின் உச்சிமுகர்ந்து உதயநிதியை வாழ்த்தியதுடன் பொன்னாடை போர்த்தினார்.பின்னர்உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதி உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு மெரினா கடற்கரையில் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு வேப்பேரி பெரியார் […]

செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், அடுத்தகட்ட கட்சி வளா்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சி சட்ட திட்ட விதிகளின் படி, வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், கேக் வெட்டி கொண்டாட்டம்

துணை முதலமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளருமான  உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை நேற்று . கோவில்பட்டியில் பல்வேறு பகுதிகளில்  திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி  அண்ணா பேருந்து நிலையம் அருகில், நகர திமுக சார்பில் கேக் வெட்டி,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு நகர அவைத்தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார் ,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன்,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,விவசாய தொழிலாளர் […]

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழகம் வருகை ; நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.. டெல்லியில் விமானம் மூலம்  புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் கவர்னர் ரவி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர், இதை தொடர்ந்து  ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீலகிரி மலையில் […]

கோவில்பட்டி

கீழஈரால் பகுதியில் நிறுத்திய அரசு பேருந்தை இயக்ககோரி கோவில்பட்டி  கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேமுதிக

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்  தேமுதிக சார்பில் கீழஈரால் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி செல்லும் காலை மாலை வேளையில் எட்டையாபுரம் முதல் சோழாபுரம் இயங்கிவந்த அரசு பேருந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கவில்லை, இதனால் மாணவ மாணவிகள் பள்ளி செல்ல மிகவும் கடினமாக உள்ளது இது பற்றி பல முறை கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து துறை மேலாளரை அணுகியும்,கீழஈரால் பேருந்து நிறுத்தத்தில் தேமுதிக சார்பில் அக்டோபர் 8 ம் தேதி பள்ளி மாணவ மாணவிகள் […]

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி முதலமைச்சரும் தந்தையுமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாயாரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலின்  உச்சிமுகர்ந்து உதயநிதியை வாழ்த்தியதுடன் பொன்னாடை போர்த்தினார். பின்னர்உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கோபாலபுரம்  இல்லத்துக்கு சென்று கருணாநிதி உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு மெரினா கடற்கரையில் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு வேப்பேரி பெரியார் […]