கீழஈரால் பகுதியில் நிறுத்திய அரசு பேருந்தை இயக்ககோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேமுதிக மனு
![கீழஈரால் பகுதியில் நிறுத்திய அரசு பேருந்தை இயக்ககோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேமுதிக மனு](https://tn96news.com/wp-content/uploads/2024/11/5049c1f4-e177-4b63-a684-cfda06eab3eb-850x560.jpeg)
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தேமுதிக சார்பில் கீழஈரால் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி செல்லும் காலை மாலை வேளையில் எட்டையாபுரம் முதல் சோழாபுரம் இயங்கிவந்த அரசு பேருந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கவில்லை, இதனால் மாணவ மாணவிகள் பள்ளி செல்ல மிகவும் கடினமாக உள்ளது
இது பற்றி பல முறை கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து துறை மேலாளரை அணுகியும்,கீழஈரால் பேருந்து நிறுத்தத்தில் தேமுதிக சார்பில் அக்டோபர் 8 ம் தேதி பள்ளி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
இதனால் தேமுதிக சார்பில் டிசம்பர் 7 ம் தேதி கீழஈரால் தேசியநெடுஞ்சாலையில் சாலை மறியல் நடைபெறும் என கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம்,மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது,
மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன்,மாவட்ட கேப்டன்மன்ற துணைச்செயலாளர் மேகலிங்கம், மேலஈரால் பொன்மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)