உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்
![உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்](https://tn96news.com/wp-content/uploads/2024/11/udhay-3-850x560.jpg)
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி முதலமைச்சரும் தந்தையுமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாயாரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலின் உச்சிமுகர்ந்து உதயநிதியை வாழ்த்தியதுடன் பொன்னாடை போர்த்தினார்.
பின்னர்உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதி உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு மெரினா கடற்கரையில் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கட்சி தொண்டர்கள் சென்று இருந்தனர்,.
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மக்கள் நலப் பணிகளைச் செய்து கொண்டாடினர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)