தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
![தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு](https://tn96news.com/wp-content/uploads/2024/11/nayanthara-850x560.webp)
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ”நயன்தாரா பியோன்ட் தி பேரி டேல்” என்ற பெயரில் ஆவணப்படமாக கடந்த 18-ம் தேதி வெளியானது.
படத்தில், ‘நானும் ரவுடிதான்’ பட பாடல் காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் என்.ஓ.சி சான்று கோரினர். ஆனால், அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. 2 ஆண்டுகளாக பதில் சொல்லாமல், என்.ஓ.சி சான்றும் தராமல் இருந்ததால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா, தனுஷை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.
‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சி, ஆவணப்படத்தின் டீசரில் இடம் பெற்றதாகவும், அதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்று கோரி தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதாகவும் நயன்தாரா கூறியிருந்தார். ஆனால், தனுஷ் தரப்பின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட அந்த 3 வினாடி காட்சியுடன் ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு விட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று தனுஷ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நயன்தாரா ஆவணப்படத்தில் தான் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை. எனவே ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இந்த வழக்கில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)