உத்தரப்பிரேதசத்தில் கார் மீது லாரி மோதியதில் 4 டாக்டர்கள் பரிதாப பலி
![உத்தரப்பிரேதசத்தில் கார் மீது லாரி மோதியதில் 4 டாக்டர்கள் பரிதாப பலி](https://tn96news.com/wp-content/uploads/2024/11/up.jpg)
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி தடுமாறியது. அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 டாக்டர்கள் உட்பட ஒரு லேப் டெக்னீசியன் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கன்னாஜ் மாவட்டம் திர்வா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர்கள். லக்னோவில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)