2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: கோவில்பட்டி தாலுகா அலுவலக பணிகள் முடங்கின

 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: கோவில்பட்டி தாலுகா அலுவலக பணிகள் முடங்கின

3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கப்பட எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 2 வது நாளாக நடைபெற்றது.
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன்,அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் பிரான்சிஸ், ஒன்றிய செயலாளர் முத்துராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில், வட்டாட்சியர்கள் ராஜ்குமார், மணிகண்டன், ராமகிருஷ்ணன், வட்டாரச் செயலாளர் ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலகம் முன்பு பிளாஸ்டிக் சேர்களை போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தாலுகா அலுவலக் பணிகள் முடங்கின.
பல்வேறு சேவைகளுக்காக தாலுகா அலுவலகம் வந்த மக்கள், அதற்கான பணிகள் நடக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *