கோவில்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், கேக் வெட்டி கொண்டாட்டம்
துணை முதலமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை நேற்று . கோவில்பட்டியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில், நகர திமுக சார்பில் கேக் வெட்டி,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு நகர அவைத்தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார் ,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன்,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தவமணி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி,சிறுபான்மையினர் பிரிவு அமலிபிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் உலகராணி,கனகராஜ்,விஜயன்,சண்முகராஜ்,மகளிரணி நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மத்திய ஒன்றிய அலுவலகம் முன்பு கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது,நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம் தலைமை தாங்கினார், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்ரகுமார்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன்,அழகுராஜ்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மாவட்ட பிரதிநிதிகள் முருகன்,அசோக்குமார்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,ஒன்றிய கவுன்சிலர் பொன்னுதுரை,ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.