2024 மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு என 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு தனது வயநாடு எம்.பி.,பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவினை காங்கிரஸ் எடுத்தது. தொடர்ந்து வயநாட்டில் போட்டியிட்டு பிரியங்கா தனது தேர்தல் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார் கேரளா வயநாடு மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரர் ராகுல் […]
கேரளாவுக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு: கோவில்பட்டி அருகே 10 டன் ரேஷன் அரிசியுடன்
கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன் தலைமையில் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது வெள்ளாலங்கோட்டை பகுதியில் சென்ற மினி லாரியை சோதனையிட முயன்ற போது, மினி லாரி நிற்காமல் வேகமாக சென்றது. அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற நிலையில் அங்குள்ள ஹரிஹர பெருமாள் கோவில் முன்பு மினிலாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் லாரியில் இருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்த போது […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மாவீரர் நினைவு தின நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சீமான் பேசியதாவது:- நானும் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் சந்தித்து பேசியது எங்கள் 2 […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். ‘ 75 வயதாகும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் […]
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் பேசப்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவி அம்மா. பல்வேறு திட்டங்களை படைத்து அனைத்து தரப்பட்ட மக்களிடமும் அன்பாக தனது வாழ்நாளில் அனைத்து மக்களும் போற்றப்படக்கூடிய முதலமைச்சராக இருந்த புரட்சி தலைவி அம்மா டிசம்பர் 5 மறைந்தது தமிழர்களுக்கு பேரிடியாக அமைந்தது. அவரது நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி உள்ள நிலையில் பொதுச் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் 5 பெண்கள் மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாலையோரம் அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று 5 பேர் மீதும் பலமாக மோதியது. இதில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் பண்டிதமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள், விஜயா, யசோதா, ஆனந்தம்மாள் மற்றும் கௌரி என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக […]
துணை முதலமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை நேற்று . கோவில்பட்டியில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில், நகர திமுக சார்பில் கேக் வெட்டி,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு நகர அவைத்தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார் ,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன்,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,விவசாய தொழிலாளர் அணி […]
கட்சத்தீவு அருகே கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 10 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி வலியுறுத்தினார். கடலோர காவல்படையினரால் லட்சத்தீவுகளின் அருகில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்யவும், குஜராத், போர்பந்தர் அருகே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்த […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கிய பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் காவல் ஆணையம் […]