Month: June 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் : மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை 

கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் மீன்கடை நடத்தி வந்தார். பகலில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கினார். அவருடன் சாமி என்பவரும் தூங்கி கொண்டிருந்தார்.    நள்ளிரவில்  இருவரும் அயர்ந்து தூங்கிய சமயத்தில் சில மர்ம நபர்கள்அங்கு வந்தனர். அவர்கள் […]

செய்திகள்

7,8 தேதிகளில் நடக்க இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வு திடீர்

நாளையும் நாளை மறுநாளும் (7.8 தேதிகள்) ஆன்லைன் மூலம் திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைககழகத்தின் மூலம்  உதவி பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது, ஏற்கனவே கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தி வந்த இந்த தேர்வை இந்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்காக 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில்  உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான […]

செய்திகள்

அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் அழைப்புக்கு உடனடி எதிர்ப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை, அந்த அளவுக்கு திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக  உள்ளது. மேலும் 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம்  தோல்வி அடைந்து இருக்கிறார்.  தனது தோல்வியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் “ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன […]

தூத்துக்குடி

குரூப் 4 தேர்வு மையத்தின் முகவரி குளறுபடி; தூத்துக்குடி ஆட்சியர் விளக்கம்   

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் அமைந்துள்ள 200 தேர்வு மையங்களில் மொத்தம் 58,373 விண்ணப்பதாரர்கள் 9.6.2024 அன்று காலை  9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு எழுதவுள்ளனர். தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து அவரவருக்குரிய தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் முழு விவரங்களுடன், […]

தூத்துக்குடி

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நடும் பணி

தமிழகத்தில் 33 சதவீத மரங்கள் இருக்க வேண்டும் ஆனால் 23 சதவீதம் மரங்கள்  மட்டுமே உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் குறைந்து 5% மரங்கள் மட்டுமே உள்ளன. மரங்கள் எண்ணிக்கையை  33% ஆக உயர்த்த வேண்டும் என்பதற்காகவும்  சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஒரு கோடி பனை மர விதைகள் விதைத்தல்,  மரக்கன்று நடுதல்,  விதைப்பந்து விதைத்தல், போன்ற பணிகளில் இந்த நிறுவனத்தினர்  ஈடுபட்டு வருகிறார்கள். […]

தூத்துக்குடி

தூத்துக்குடி: சட்டசபை தொகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

தூத்துக்குடி நாடாளுமன்ற  தொகுதியில் கனிமொழி எம்.பி. திமுக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கனிமொழி உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய 6 சட்டசபை தொகுதி வாரியாக திமுக (கனிமொழி), அதிமுக(சிவசாமி வேலுமணி) நாம் தமிழர் கட்சி( ரோவினா ரூத் ஜேன்)த.மா..கா.(விஜயசீலன்) வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:- விளாத்திகுளம் திமுக- 80369 அதிமுக – 31711 நாம் தமிழர் கட்சி-18879 த.மா.கா.- 14174 தூத்துக்குடி […]

செய்திகள்

டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தலைவர் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொல்வதற்காக விமானம் மூலம் டெல்லி சென்றார். விமான நிலையத்தில் டி.ஆர்,பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன்   உள்பட பலர் மு,க.ஸ்டாலினுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். டெல்லியில் தெலுங்கு தேச தலைவரும் […]

கோவில்பட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு  ஏற்படுத்திய அரசு பள்ளி ஆசிரியைகள்

நாடு முழுவதும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாத்திட உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுற்றுப்புற சூழல் தின நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தியும்,பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தும்.சுற்றுச்சூழலை பாதுகாத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்பிரகாஷ் ராஜன் தலைமை தாங்கினார்., பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா முன்னிலை வகித்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் […]

செய்திகள்

தமிழகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள், மாநில தலைவருடன் சந்திப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் 9 தொகுதியில் போட்டியிட்டது. போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், சுதா ராமகிருஷ்ணன், விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், கே. கோபிநாத், மற்றும் விளவங்கோடு எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் ஆகியோர் இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது  எஸ். ராஜேஷ்குமார், கே.வி. […]

தூத்துக்குடி

`தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை இத்தோ்தல் முடிவு காட்டுகிறது’; கனிமொழி பேட்டி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 5,40,729 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளரை விட  கனிமொழி 3,92,738 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு என்னில்க்கை முடிந்ததும்  கனிமொழி, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர்  கோ.லட்சுமிபதியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். அமைச்சா்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி. சண்முகையா, ஜீ.வி. மாா்க்கண்டேயன், மேயா் ஜெகன் […]