டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தலைவர் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொல்வதற்காக விமானம் மூலம் டெல்லி சென்றார். விமான நிலையத்தில் டி.ஆர்,பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் உள்பட பலர் மு,க.ஸ்டாலினுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
டெல்லியில் தெலுங்கு தேச தலைவரும் ஆந்திராவில் புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தததாக தெரிவிக்கப்பட்டது.