தமிழகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள், மாநில தலைவருடன் சந்திப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் 9 தொகுதியில் போட்டியிட்டது.
போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், சுதா ராமகிருஷ்ணன், விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், கே. கோபிநாத், மற்றும் விளவங்கோடு எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் ஆகியோர் இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது எஸ். ராஜேஷ்குமார், கே.வி. தங்கபாலு, சிரிவெல்லபிரசாத், சொர்ணா சேதுராமன், ரூபி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.