தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் கோவில்பட்டியில் 2 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி கே.அய்யப்பன் தலைமையில் நடந்தது. சார்பு நீதிபதி டி.மாரிக்காளை முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.கருப்பசாமி, குற்றவியல் நீதிபதி பி.பீட்டர், விரைவு நீதிமன்ற நீதிபதி கே.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு […]
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் 5 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. காலையில் முதல் போட்டியாக மூப்பன்பட்டி வீரன் சுந்தரலிங்கம் ஆக்கி அணி இலுப்பையூரணி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் கூசாலிபட்டி ஏ எம் சி அணியினர் ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது மூன்றாவது போட்டியாக சேலம் ஹாக்கி அணி பாண்டவர்மங்கலம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அந்த வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கோவில்பட்டியில் தலைமறைவாக இருந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- ‘தேர்தல் நன்னடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மக்கள் தீர்க்கும் நாள் கூட்டம் இனி வருங்காலங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு அரசு விடுமுறைகள் இல்லாத ஒவ்வொரு திங்கட்கிழமையும் தொடர்ந்து நடத்தப்படும். அந்த வகையில் வரும் திங்கட்கிழமை அதாவது 10.6.24 அன்று முற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ளலஅனைத்து சார்நிலை […]
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி, அஸ்ட்ரோ கிளப் சார்பில் கல்லூரி பொன்விழா கலையரங்கில் கோள்கள் திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கனகராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் குருவாசுகி பேராசிரியர் அமுதரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வானவியலும் மனித வாழ்வும் என்ற தலைப்பிலும். தூத்துக்குடி அஸ்டரோ கிளப் மாவட்ட கருத்தாளர் ஜெயபால் விண்வெளியில் வேலைவாய்ப்பு பற்றியும், மாதிரி பள்ளி வானவியல் […]
கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 50). இவர் ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயில் அருகே மீன் மற்றும் கோழி கடை நடத்தி வந்தார். அதே கடையில் மேலப்பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த மகாராஜா என்ற சாமி (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இருவரும் மீன் கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவுக்கு பிறகு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த வந்த 3 பேர், கடைக்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த […]
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் தொடங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை, மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிலுவையில் வைத்தது. இதற்கிடையே கட்சியின் பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, […]
சென்னை, வரா பியூச்சர்ஸ் எல்எல்பி லிமிடெட் நிறுவன நிதியுதவியுடன் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை, பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் இலவச முகாமை கடந்த 9.5.2024 மற்றும் 12.5.2024 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. விபத்து மற்றும் போலியாவால் பாதிக்கப்பட்டு கை மற்றும் கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு உதவ ஓர் புதிய முயற்சியாக நடத்தப்பட்ட இம்முகாம்களில் கலந்து கொண்டு அளவீடு செய்த பயனாளிகளுக்கு […]
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் ( ஜூன் 7,8,9 ) நடைபெறுகிறது இன்று காலையில் முதல் போட்டியை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் அறநிலை துறை உறுப்பினர் சண்முகராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் சண்முகராஜா மற்றும் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வீரர்களை […]
தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் சமூக தணிக்கை மாநில அளவிலான கருத்தரங்கு திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்.சத்துணவு திட்டம் ஆகிய திட்டங்களை சமூக தணிக்கை மேற்கொள்வது குறித்து மாவட்ட,வட்டார வளப் பயிற்றுனர்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசின்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் இயக்குனர் கிளாஸ்டன் புஷ்பராஜ் சமூகத்தணிக்கை […]