• May 20, 2024

Month: March 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் பாதம் கழுவும் நிகழ்வு

இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார். பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்து மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்  1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு  நற்கருணையை ஏற்படுத்தினார் . 2 . தன் சீடர்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு நான் உங்களுக்கு பணிவிடை செய்வது போல நீங்களும் […]

செய்திகள்

தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் ; முன்னாள்

சென்னை ராயபுரத்தில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் வடசென்னை தொகுதி பொறுப்பாளருமான  டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர்.,ஜ ஜெயலலிதா  ஆகியோரது திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்‌ கூறியதாவது,; மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறையை திமுக அரசும், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி திருமங்கை நகர் வீரலட்சுமி நரசிங்கபெருமாள் கும்பாபிஷேகம்

கோவில்பட்டி  திருமங்கை நகரில் ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிங்கபெருமாள் ஆலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் வீரலட்சுமி நரசிம்மர் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா 25-ந் தேதி தொடங்கியது,.,தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது, இரவில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன,. பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்,. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவில்  […]

செய்திகள்

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் கிருஷ்ணசாமி பெயரில்  5 பேர் மனு

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை […]

தூத்துக்குடி

காதல்ஜோடியை  மிரட்டி  செயின் பறிப்பு : ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகணேஷ் இவர் கடந்த 8ம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு சென்றார். அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இருவரையும் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் இருவரையும் மிரட்டிய அந்த வாலிபர் இருவரது புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதுடன் படத்தை வெளியிடாமல் இருக்க பால கணேசன் காதலியிடமிருந்து அவர் […]

கோவில்பட்டி

சங்கரா கிட்ஸ் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் யுகேஜி யிலிருந்து முதல் வகுப்பிற்கு தகுதி பெற்ற இளம் மழலையர்களுக்கு பட்டமளிப்பு செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் சுரேஷ்குமார்,பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிச் செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கோவில்பட்டி கிளை உதவி மேலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு மழலை குழந்தைகளுக்கு […]

கோவில்பட்டி

தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்க செயல்பாடுகள்; மாவட்ட ஆளுநர்  ஆய்வு

ஒவ்வொரு வருடமும் ரோட்டரி சங்கங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்வது வழக்கம். தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து  ஆலோசனை வழங்கினார் ..இதில் ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களாக முத்துகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்தனர்..இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன்,மாவட்டச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் […]

தூத்துக்குடி

தீப்பெட்டி தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரம் உயர பாடுபடுவேன். ; தூத்துக்குடி அதிமுக வேட்பாளர்

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘ தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, அவரது கணவர், மற்றும் மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 […]

தூத்துக்குடி

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: கலெக்டர் லட்சுமிபதி விளக்கம்

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்களை பொதுத்தோ்தல் பாா்வையாளரிடம் தெரிவிக்க சிறப்பு கைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  மக்களவைத் தோ்தலையொட்டி, இந்திய தோ்தல் ஆணையம் மூலம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல் பாா்வையாளராக திவேஷ் ஷெஹரா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், தோ்தல் நடைமுறைகள் நிறைவடையும்வரை இம்மாவட்டத்தில் தங்கியிருந்து தோ்தல் பணிகளைப் பாா்வையிடுவாா். எனவே, தோ்தல் நடத்தை விதிகள், செலவினங்கள், […]

செய்திகள்

வேட்புமனுக்கள் பரிசீலனை ;30-ந் தேதி மாலை இறுதி பட்டியல் வெளியாகும்  

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தோ்தலில் போட்டியிட மொத்தம் 43 போ் மனு தாக்கல் செய்துள்ளனர்..இதே போல் தென்காசி தொகுதியில் 34 பேர் வேட்புமனு  தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜனதா கட்சிகள்  தலைமையில் 3 கூட்டணி கள் உள்ளன,. நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இல்லாமல் அணைத்து தொகுதிகளிலும் […]