• May 9, 2024

Month: February 2024

தூத்துக்குடி

கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர் ஆனவரை வெட்டிக்கொன்ற கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வடிவேல் முருகன் (வயது 28). இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர்மோட்டார் சைக்கிளில்  ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி -நெல்லை தேசிய நெடுஞ்சாலையில்  பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இதையடுத்து வடிவேல் முருகன் மோட்டார் சைக்கிளை  அங்கேயே போட்டுவி்ட்டு உயிர் பிழைக்க  காட்டிற்குள் தப்பிச் ஓடினார்… ஆனாலும் மர்ம நபர்கள் அவரை விடவில்லை. […]

தூத்துக்குடி

தடைகளை தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவோம்; தூத்துக்குடி விழாவில் பிரதமர் மோடி பேச்சு

2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார். துறைமுக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. அங்கு மத்திய இணைமந்திரி முருகன் பிரதமரை நேரில் வரவேற்றார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் விழா நடந்த இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி விழாவில் பங்கேற்றார்.ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை […]

செய்திகள்

ராஜீவ்காந்தி  கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவர் இலங்க்கையை சேர்ந்த சாந்தன். இவர் 32 ஆண்டுகள்  சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கை சாந்தன், கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்ட அவர், தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்த […]

ஆன்மிகம்

ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு

தீராத_கஷ்டமாக_இருந்தாலும் அந்த துயரத்தை துடைப்பதற்கு நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு. இந்த ராகு கால துர்க்கை அம்மன் வழிபாட்டை, பலபேர் கோவிலுக்கு சென்று தான், வழிபடுவார்கள். கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட முடியாதவர்கள் கூட வீட்டில் இருந்தபடியே ராகு காலத்தில் எப்படி பூஜை செய்வது? எந்த கிழமையில் ராகுகால பூஜை செய்தால் என்ன பலனை அடைய முடியும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் ; காங்கிரசார் கைது

தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று நடக்கும் விழாவில்  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 17,300 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார், இதையொட்டி தூத்துக்குடியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,. இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் துறைமுக சேர்மன் குடியிருப்பு முன்பு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு இலங்கை அரசால் பிடித்து சிறை வைக்கப்பட்டுள்ள […]

ஆன்மிகம்

மாசி மாத சங்கடஹர சதுர்த்தி: மஞ்சள்கயிற்றை மாற்றி சுமங்கலி வரம் பெறுங்கள்

28-02-2024 மகிமை நிறைந்த மாசி சங்கடஹர சதுர்த்தி விரதம்.. நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். *சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி ஆகும். பவுர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத […]

கோவில்பட்டி

சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் குதிரையுடன் முழு உருவ வெண்கல சிலை திறப்பு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை  முதலமைச்சர்  மு க.ஸ்டாலின்* காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரையுடன் கூடிய முழு உருவ வெண்கல சிலையை  அமைச்சர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ வி.மார்க்கண்டேயன் ஆகியோர் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். […]

கோவில்பட்டி

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திராவும், கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய கோவில்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்புராஜ் தலைமை தாங்கினார், கோவில்பட்டி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்களிப்பின் முக்கியத்துவம் பற்றியும், புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, மாற்றியமைத்தல் போன்றவற்றை இணையதளம் வாயிலாக […]

செய்திகள்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை; நிகழ்ச்சிகள் முழு விவரம்

பிரதமர் மோடி 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக சுற்றுபயணம் இன்று தொடங்கியது. மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வருகை தந்தார். விமான நிலையத்தில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர் மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றார். மதியம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி, நாளை அடிக்கல் நாட்டுகிறார்

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தூத்துக்குடியில் நாளை (28.2.2024) காலை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறுஉள்கட்டமைப்புத் திட்டங்கள், இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். முழுமையாக […]