பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை; நிகழ்ச்சிகள் முழு விவரம்
![பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை; நிகழ்ச்சிகள் முழு விவரம்](https://tn96news.com/wp-content/uploads/2024/02/Narendra-Modi-850x560.jpg)
பிரதமர் மோடி 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக சுற்றுபயணம் இன்று தொடங்கியது.
மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வருகை தந்தார்.
விமான நிலையத்தில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பின்னர் மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றார்.
மதியம் 2.45 முதல், 3.45 வரை என் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் பிரதமர் ,மோடி கலந்து கொள்கிறார்.
3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, பல்லடம் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றடைகிறார்.
5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார்
இன்றைய தினம் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார்
நாளை 28.2.2024
நாளை காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்
8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9. மணிக்கு சென்றடைகிறார்..
9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்
10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார்
11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்
12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி
ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)