• May 20, 2024

Month: December 2023

செய்திகள்

பா,ஜனதாவுடன் கூட்டணி இல்லை; அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி

சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளில் சமீபத்தில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பலியான மக்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டம் தொடங்கியது. இலங்கை தமிழர்கள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு ; அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு

நெல்லை, தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதி மந்திர நிர்மலா சீதாராமன் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். இன்று காலை 10.15 க்கு சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி புறப்பட்டார். பகல் 12 மணியளவில் தூத்துக்குடி வந்த்டைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கலெக்டர் அலுவலகம் சென்றார். அங்கு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி, நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து துறை […]

தூத்துக்குடி

வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்-தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ 6 ஆயிரம் வழங்க இன்று முதல் வீடுகளுக்கே டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் லட்சுமிபதி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண […]

செய்திகள்

சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் ஜனவரி 4 முதல் நாகர்கோவில் வரை நீட்டிப்பு

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி  இடையே இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்- திருநெல்வேலி  இடையே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மிக முக்கிய ரெயில் நிலையமாக விளங்கும் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு […]

தூத்துக்குடி

டீக்கடைக்கு வெளியே அமர்ந்து  அமைச்சர்களுடன் தேநீர் அருந்திய தலைமை செயலாளர்

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர். மாவட்டம் முழுவதும் அனைத்து  பகுதிகளுக்கும் சென்று பாதிக்கபப்ட்ட பகுதிகள் மற்றும் மக்களை சந்தித்தார். கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்ட சிவதாஸ் மீனா,  மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் செய்த பணிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக கேட்டறிந்தார்.   முன்னதாக ஆய்வின்போது  தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒரு டீக்கடை கடை முன்பு அமர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன், […]

கோவில்பட்டி

தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்-வைகோ

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் சார்பில், மின் நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நாளை டிசம்பர் 27 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உயர்த்தப்பட்ட 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெறவேண்டும், […]

கோவில்பட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 வது ஆண்டு விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 வது ஆண்டு விழா கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் கொண்டாடப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தின் முன்பு உள்ள கட்சி கொடிக்கம்பத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன் கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். நகர துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்,தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நகர குழு உறுப்பினர்கள் […]

தூத்துக்குடி

மழை வெள்ளத்தில் உயிர் இழந்த 22 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ.5 லட்சம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  உயிரிழந்த 22 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகை, வீடுகள் சேதமடைந்த 16 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவித்தொகையை என மொத்தம் 38 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நிவாரண உதவித்தொகைகளை கனிமொழி எம்.பி. முன்னிலையில்அமைச்சர் […]

கோவில்பட்டி

சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக 10-ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழாகோவில்பட்டி முத்தையாமல் தெருவில் நடைபெற்றது.  நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் கலந்துகொண்டார். இந்திய உலக அமைதிக்காக 1000 ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி,பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ்,நகர நிர்வாகிகள் தங்கப்பாண்டி,தவசி பாலு,மதிமுத்து முத்துக்குமார், முத்துப்பாண்டி, கணேசமூர்த்தி மற்றும் […]

கோவில்பட்டி

99 வது பிறந்தநாள்: வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  99 -வது நிரந்தரம் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பாஜக மாவட்ட அலுவலகத்தில் வாஜ்பாய் செயல்பாடுகளை  நினைவூட்டும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.  பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.  பொதுச்செயலாளர் வேல் ராஜா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகேசன், பொருளாளர் கே கே ஆர் கணேசன், தொழில்பிரிவுமாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.  இந்த தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் […]