• May 9, 2024

Month: September 2023

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடைபயிற்சிக்கான 8 கி.மீ.நடைபாதை; அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் “ஹெல்த் வாக்” என்ற திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதன் அடிப்படையில் ஹெல்த் வாக் திட்டம் தொடங்கப்படுகிறது. அதனபடி  தூத்துக்குடி ரோச் பார்க் கடற்கரை சாலையை இன்று 29.9.23 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் […]

கோவில்பட்டி

எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா இன்றுடன் நிறைவு; நாளை சிறப்பு பட்டிமன்றம்

கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி தூய மிக்கேல் அதிதூதர் திருவிழா கடந்த 20 ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 9-ம் நாள் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை பாளை மறை மாவட்ட காமநாயக்கன்பட்டி திருத்தலம் பேராலயமாக உயர்த்தப்பட்ட அருள்நிறை […]

செய்திகள்

விவசாய விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் மரணம்

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த எம். எஸ். சுவாமிநாதன் விவசாய விஞ்ஞானி ஆவார். கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன், 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்தார். அவருடைய முழு பெயரான மான் கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்பதை சுருக்கி எம் எஸ் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11. 20 மணி […]

செய்திகள்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமனம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன். ஓ.பி.எஸ். அணிக்கு சென்றுவிட்ட நிலையில்  புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த பட்டியலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. இடம்பெற்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி […]

கோவில்பட்டி

அரிவாள் முனையில் வழிப்பறி செய்தவர் சிக்கினார்

கோவில்பட்டி: ராஜபாளையம் அழகாபுரியை சேர்ந்த கண்ணன் மகன் முருகராஜ் (வயது41). டெய்லர். இவர் மனைவியுடன் கோவில்பட்டி காந்திநகர் அத்தைகொண்டான் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒருவாலிபர் வழி மறித்தார். அரிவாளை காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டார்.. முருகராஜ் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், முருகராஜை தாக்கியதுடன்  சட்டை பையில் இருந்த 1௦௦௦ ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டாராம். இதில் காயம் அடைந்த முருகராஜ் […]

கோவில்பட்டி

பகத்சிங் பிறந்தநாள்: இளைஞர் பெருமன்றத்தினர் உறுதிமொழி ஏற்பு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவில்பட்டி நகர குழு சார்பில் மாவீரன் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய திருநாட்டைபாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் பெருமன்றம் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், தாலுகா செயலாளர் மணி, நகர தலைவர் ரஞ்சனி கண்ணம்மா உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்பில் கலந்து கொண்டனர். மேலும் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் ஜி.,பாபு.,மாவட்ட குழு பரமராஜ், பஞ்சாலை செயலாளர் குருசாமி, […]

தூத்துக்குடி

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இந்திய தபால் துறையின் அஞ்சல் ஆயுள் காப்பீடுகளில் முதலீடு செய்து உள்ளவர்கள் மற்றும் தொடர்ந்து பிரீமியம் செலுத்த தவறியவர்கள் காலாவதியான பாலிசிகளை சலுகை தொகையில் புதுப்பிக்க சிறப்பு முகாம் 1.6.2023 முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.  மேலும் இந்த முகாமானது 31.8.23 வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சிறப்பு முகாம் 30.11.23 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் […]

தூத்துக்குடி

கஞ்சா கடத்திய 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு  

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே கடந்த 28.8.2023 அன்று 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில், தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனி ஆரோன் (வயது 31), தூத்துக்குடி பாரதி நகர்  இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணா நகர்  மூக்காண்டி (எ) ராஜா (30),  அருண்குமார் (27), காளீஸ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), […]

தூத்துக்குடி

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.32.39 கோடி; ஆட்சியா் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021 மே 7 ஆம் தேதி முதல் நிகழாண்டு ஆகஸ்ட் வரை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில், மீன்பிடிப்பு குறைவு காலங்களில் மீனவா்களுக்கு சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 72 ஆயிரத்து 322 மீனவ குடும்பங்களுக்கு ரூ.41.13 கோடி சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீனவா் சேமிப்பு மற்றும் […]

தூத்துக்குடி

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறுத்தம்  

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சா.ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இன்று  (28 9 2023)  வியாழன் அன்று தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நாம் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தூத்துக்குடி காவல் ஆய்வாளர் நேற்று  (27/9/2023) கடைசி நேரத்தில் மாலை 7:30 மணியளவில் அனுமதி மறுத்துள்ளார்கள் .எனவே நீதிமன்ற அனுமதி பெற்று 23.10.2023 திங்கள் மற்றும் 24.10.2023 செவ்வாய்   ஆகிய நாட்களில் மீண்டும் […]