• May 20, 2024

தூத்துக்குடியில் நடைபயிற்சிக்கான 8 கி.மீ.நடைபாதை; அமைச்சர்கள் ஆய்வு

 தூத்துக்குடியில் நடைபயிற்சிக்கான 8 கி.மீ.நடைபாதை; அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் “ஹெல்த் வாக்” என்ற திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதன் அடிப்படையில் ஹெல்த் வாக் திட்டம் தொடங்கப்படுகிறது.

அதனபடி  தூத்துக்குடி ரோச் பார்க் கடற்கரை சாலையை இன்று 29.9.23 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் ஆகியோர் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதி படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த நடைபயிற்சி பாதையில் அவர்கள் அதிகாலையில் நடக்க தொடங்கினார்கள். அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர்.ச.அஜய் சீனிவாசன் , சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் எஸ்.பொற்செல்வன் மற்றும் அதிகாரிகள்  சென்றனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *