• May 20, 2024

Month: September 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.விஸ்வகர்ம மகாஜன சங்க  துணை தலைவர் சண்முகவேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் தஙகள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சந்திராயன் 4, எரிமலை, காற்றாலை,  பசுமை வீடு,  3டி, சோலார், உள்ளிட்ட கண்காசிகள் இடம்பெற செய்திருந்தனர். அவற்றை பார்வையிட்ட அனைவரும் பாராட்டினார்கள். . நிகழ்ச்சியில் விஸ்வகர்ம உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேஸ்வரி, […]

கோவில்பட்டி

எழுத்தறிவு தினம் `லோகோ’ வடிவில் பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு

. உலக நாடு முழுவதும் செப்டம்பர் 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான கருப்பொருள் நிலையான அமைதியான உலகத்தை உருவாக்குதல் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தின் அவசியத்தை எடுத்து கூறும் வகையில் அனைவரும் எழுதப் படிக்க வாருங்கள் என்று கூப்பிடுவதைப்போல் அறிவொளி இயக்க இலச்சினை (லோகோ) வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் […]

தூத்துக்குடி

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்; கனிமொழி வழங்கினார்

தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆத்தூர் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. மண், காற்றுவளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணம். ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெறுகிறது. ஆத்தூர் வெற்றிலை தமிழகம் மட்டுமின்றி, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் […]

கோவில்பட்டி

கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது

கோவில்பட்டி போலீஸ்  துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது  அவர் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரண்குமார் (வயது 25) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து […]

தூத்துக்குடி

சிறு, குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் வங்கி கடன்;

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ,தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு அதிக பட்சம் ரூ.1 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள்/தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையான 50 விழுக்காடு அரசின் பின்நிகழ்வு மானியம் (அதிக பட்சம் தலா ரூ.50,000/-) வழங்கப்படுகிறது. வங்கி […]

கோவில்பட்டி

கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை: கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர்கள் புல்லாங்குழல் இசைத்தனர்  

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது . இதனையொட்டி  கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை,கணபதி ஹோமம் , நவக்கிரக ஹோமம் ,மூலமந்திர ஹோமம் ,பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். கிருஷணர் வேடமணிந்து […]

தூத்துக்குடி

கையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று (5.9.2023) சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் “சண்டியர் மூர்த்தி” (sandiyar moorthy) என்ற பெயரிலான பக்கத்தில் கோவில்பட்டி அருகே  கடம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையிலான மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட […]

கோவில்பட்டி

கிருஷ்ணஜெயந்தி விழா; கிருஷ்ணர் வேடமிட்ட  சிறுவர், சிறுமிகளுக்கு பரிசு

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் ஹவுசிங் போர்டு ஸ்ரீ பிருந்தாவனம் தியான மடத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம் நடைபெற்றது. 8மணியில் இருந்து 10 மணி வரை  சிறப்பு பஜனை நடந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்தனர். அவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 11 மணிக்கு மேல் கிருஷ்ணருக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வ.உ.சி பிறந்தநாள் விழா

விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் விழா கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் கொண்டாடப்பட்டது. கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் மற்றும் சாத்தூர் கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் ஜெயா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச்செம்மல் கருத்தப்பாண்டி, வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர் கருத்துரை […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் 15 லட்சம் பனை விதைகள் நட ஏற்பாடு

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் வருகிற 24 ம் தேதி ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 163 கிலோமீட்டர் கடலோரப் பகுதிகளில் 15 லட்சம் பனை விதைகள் நடப்படுகிறது. இதற்கான  ஶ்ரீவைகுண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி தலைமையில் சேகரிக்கப்பட்ட 3000 பனை […]