• May 20, 2024

95 விவசாயிகளுக்கு மானியத்தில் பவர்டில்லர், விசை களையெடுப்பான்கள்

 95 விவசாயிகளுக்கு மானியத்தில் பவர்டில்லர், விசை களையெடுப்பான்கள்

வேளாண்மை – உழவர் நலத்துறை   சார்பில் விவசாய பெருமக்களிடையே சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

 இதை தொடர்ந்து , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று (4.9.2023) வேளாண்மைப் பொறியியல் துறையின்  சார்பில்  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களைச் சார்ந்த வேளாண் பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம்-2023-2024 கீழ், 95 விவசாயிகளுக்கு மானியத்தில் ரூ.77.35 லட்சம் மதிப்பிலான பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான்களை அமைச்சர்கள்.பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் .கி.செந்தில்ராஜ். தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் .எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர்.அ.பிரம்மசக்தி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) .பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்) கிளாட்வின் இஸ்ரேல், உதவி செயற்பொறியாளர்கள் .ஜெகவீரபாண்டி, செவ்வேல், சங்கரநாராயணன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *