• May 20, 2024

Month: May 2023

செய்திகள்

முதல் அமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தில்  எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டீர்கள்? டி.ஜெயக்குமார்

சென்னையில்  திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக  புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகளை முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் இன்று பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-. கேள்வி :-  புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அதிமுகவுக்கு அழைப்பு வந்துள்ளதா?. பதில் :- அதிமுகவின் சார்பிலே நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் கலந்துகொள்வது குறித்து அவர் முடிவு செய்வார். எங்கள் கட்சிக்கு […]

கோவில்பட்டி

சாலையின் இருபுறமும் நடும் பணிக்காக 2,300 மரக்கன்றுகள் கோவில்பட்டி வந்தன

தமிழகத்தில் நெடுஞ்சாலை  ஓரங்களில் அதிகமாக மரங்களை நடவு செய்து பசுமையாக்கவும் வாகன ஓட்டிகள் மரநிழலில் இளைப்பாறும் வகையில் அதிகமான மரக்கன்றுகள் நடவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நெடுஞ்சாலைத ;துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அரசின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் மரங்கள் நடவேண்டும் என்றும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் தென்மாவட்ட ஆக்கி போட்டி தொடக்கம்

கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமி சார்பாக தென்மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் நேற்று தொடங்கியது . சனிக்கிழமை வரை போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியாக பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இலுப்பையூரணி அம்பேத்கர் ஆக்கி அணிகள்  மோதின. ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் மற்றும் கோவில்பட்டி 32 வது நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் ஆகியோர்  போட்டியை […]

செய்திகள்

திண்டுக்கல் மறவபட்டி புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் அதிசய நீரூற்று

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் புனித சந்தியாகப்பர் குதிரையில் வலம் வந்து மக்களை காப்பதாக நம்ப படுகிறது.இன்று காலை 8. 30 மணிக்கு புனித சந்தியாகப்பர் தேவாலயத்தின் முன் அதிசயமாக நீரூற்று ஏற்பட்டு உள்ளது. இதை அந்த பகுதி மக்கள் தெய்வசெயலாக பார்த்து வருகின்றனர்.இந்த புனித சந்தியாகப்பர் திருத்தல ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவேண்டும்; டி.ஜெயக்குமார் அறிக்கை

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் நேற்று (23.05.2023) வெளியிட்ட அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும் கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், தொடர்ந்து 2019-ல் அமெரிக்கா, துபாய் பயணங்கள் மற்றும் 2020-ஆம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வசந்த திருவிழா தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்  உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் *வசந்ததிருவிழா* இன்று 24-ந் தேதி தொடங்கியது. காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது, இன்று இரவு  7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் வேதபாராயணம் தேவார இன்னிசையுடன் உலா வருதல். நடக்கிறது. ஜூன் 2 -ந் தேதி வரை வசந்த திருவிழா நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது,. விழா நிறைவு நாளன்று வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் காலை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் தேசிய பயிற்சி தினம்; தொழில் முனைவோருக்கு முக்கிய ஆலோசனைகள்

ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்பது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் செயலில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் மில்லியன் கணக்கான முன்னாள் மாணவர்களைக் கொண்ட உலகளாவிய இளம் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் மே 23 -ந்தேதியை தேசிய பயிற்சி தினம் என்று கொண்டாடி வருகிறது. இந்த நாளில் ஜே.சி.ஐ.உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று தேசிய பயிற்சி தினம் […]

தூத்துக்குடி

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தூத்தக்குடி  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/-ம் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/-வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி:  மும்பை, டெல்லி, சென்னை அணிகள் வெற்றி

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான  நேற்று  மாலை 5. மணிக்கு தொடங்கிய 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை, யூனியன் பேங்க், மற்றும் ஹூப்ளி, சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே  அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே மும்பை யூனியன் பேங்க் அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அணி வீரர்கள் அடுத்தடுத்து கோலகள் போட்டபடி இருந்தனர். 18-வது […]

செய்திகள்

புனித சலேத் மாதா திருவிழா: முழங்காலிட்டு தேரை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய

திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 13ஆம் தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.நவநாள் நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு நாள் மாலையும் புனித சலேத் மாதாவின் திரு உருவம் தாங்கிய கொடி, மற்றும் புனித சலேத் மாதா மின் ரதம் போன்றவை ஜெபமாலை ஊர்வலத்துடன் நடைபெற்று நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்று விழா கடந்த 21-ந் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொடியேற்ற விழா […]