• May 20, 2024

Month: April 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவருக்கு சிறந்த அறிவியல் படைப்புக்கான விருது

தூத்துக்குடி மாவட்ட வானவில் மன்றத்தின் சார்பில் அறிவியல் படைப்புக்கான போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்,. அவர்களில் ஒருவரான  கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர் வீரமணிகண்டன் உபயோகமற்ற பொருட்களிலிருந்து எளிய முறையில் டார்ச்லைட் தயார் செய்து காட்டினார். இதையொட்டி  மாவட்ட அளவில் மாணவர் வீரமணிகண்டன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இதையொட்டி மாணவர் வீரமணிகண்டனை கோவில்பட்டி ரோட்டரி சங்கம் பாராட்டி சிறந்த அறிவியல் படைப்புக்கான விருதினை வழங்கியது. கோவில்பட்டி புதுரோடு […]

செய்திகள்

பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வைத்த பேனர் அகற்றம்

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை போட்டியால் அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனது செல்வாக்கை காட்ட திருச்சியில் இன்று மாலை மாநாடு நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநாட்டுக்கு தொண்டர்களை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர். அந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவதுபோல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி […]

தூத்துக்குடி

தெற்கு திட்டங்குளம் மார்க்கெட் நடத்த அனுமதிக்க வேண்டும்; வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிறுவனத்தலைவர் சந்திரன் ஜெயபால் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மே 5 ம் தேதி 40-வது வணிகர் தின கோரிக்கை மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டில், சிறு வணிக கடைகளுக்கு மின்கட்டண சலுகை கோருதல், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்கு உட்படுத்த கோருதல், சொத்துவரி உயர்வை 50 சதவீதம் குறைக்கக் கோருதல், ஆன்லைன் வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தி கலாச்சாரம் சார்ந்த தமிழக வணிகத்தை காக்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி […]

ஆன்மிகம்

சதுரகிரி மலையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம்!!!

சதுரகிரியில் மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் ஒன்றினைப் பற்றிய சுவாரசியமான ஒரு தகவலை இன்று பார்ப்போம். அகத்தியர் அருளிய “ஏம தத்துவம்” என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்டது இந்த தகவல். மிகவும் பழமையான இந்த நூல் தற்போது பதிப்பில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இது  நூற்றாண்டுகளைத் தாண்டிய பதிப்பு. அசுவினியார் என்கிற சித்தர் மூலிகைகள் மற்றும் அவற்றின் நுட்பங்கள், கோவில்கள் மற்றும் அதன் சூட்சுமங்கள் போன்ற தனது வாழ்நாள் அனுபவங்கள் முழுவதையும் ஒரு நூலாக எழுதினாராம். அந்த […]

கோவில்பட்டி

பசுவந்தனை கைலாசநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா நாளை தொடக்கம்

கோவில்பட்டியை அடுத்த பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் கயத்தாறு மன்னராலும், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னராலும், அதனைத் தொடர்ந்து எட்டப்ப நாயக்க மன்னரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில் இந்த கோவில் முழுமையாக கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இக்கோவிலில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா நாளை  25-ந்தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 5-ந்தேதி வரை நடக்கும் விழா நாட்களில் தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் காலை 8 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலைய காய்கறி மார்க்கெட்டில்  வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது

கோவில்பட்டி நகராட்சி சந்தையில் உள்ள கடைகள் இடிக்கபட்டு புதிதாக 250 கடைகளுடன் புதிய சந்தை கட்டப்படுகிறது. அதுவரை கூடுதல் பஸ் நிலையத்தில் சந்தை இயங்கும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து தகர கொட்டகை கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூடுதல் பஸ் நிலையத்துக்கு மாறமாட்டோம் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்கள். மேலும் தெற்கு திட்டங்குளம்  முத்து நகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தாமான இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் காய்கறி மார்க்கெட் இன்று முதல் காலவரையின்றி மூடப்பட்டது

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு 250 கடைகள் கொண்ட புதிய மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது, அதுவரை மாற்று இடமாக புதியபஸ் நிலையத்தில் மாற்று கடைகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகளில் ஒரு தரப்பினர் அங்கு செல்ல மறுத்து விட்டனர், மேலும் மார்க்கெட்டை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு  மத்தியில் கடந்த திங்கட்கிழமை காலை மார்க்கெட் இடிப்பு பணி […]

கோவில்பட்டி

ரம்ஜான் பண்டிகை: கோவில்பட்டியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்,. கோவில்பட்டியில் முகமது சாலிஹாபுரம் ஜாமி ஆ. பள்ளிவாசல் ஈத்கா திடலில் ரம்ஜான் இன்று காலை 7 மணிக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. மவுலவி ஷேக் மீரான் தீன் உரையாற்றினார்,.. தலைவர் சையத் மஹபுப்  பாட்சா  . துணை தலைவர் முஹம்மது உசேன்,  துணை செயலாளர் பீர் மைதீன்  மற்றும் நிர்வாக கமிட்டி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்படுகிறது-அனுமதி கிடைத்தவுடன் திறப்போம்; வியாபாரிகள்

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு 250 கடைகள் கொண்ட புதிய மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது, அதுவரை மாற்று இடமாக புதியபஸ் நிலையத்தில் மாற்று கடைகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து விட்டனர், மேலும் மார்க்கெட்டை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு  மத்தியில் கடந்த திங்கட்கிழமை காலை மார்க்கெட் இடிப்பு பணி தொடங்கியது. இதை […]

சிறுகதை

உயிரின் விலை… (சிறுகதை)

ரமேஷ்..அந்த ரெயில் தண்டவாளத்தை நோக்கி வேகமாக நடந்தான்..அதிகாலை நேரம்..ஆட்கள்  நடமாட்டம் அதிகம் இல்லை.அவனது கால்கள் விரைந்து நடந்தன.மனதில் ஒரு.. கோபம்….கண்களில் ஒரு வெறி.. அதிகாலையிலே அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த வழியாகத்தான் போகும்..பலமுறை பார்த்திருக்கேன்…இன்னைக்கும் சரியான நேரத்திலே வந்திடும்..முடிச்சிட வேண்டியதுதான்.. ஒரு வேளை சீக்கிரம் ரெயில் வந்திட்டா..மிஸ்ஆகிடும்..அடுத்த ரெயில்வர நேரமாகும்..கூட்டம் வந்திடும்..அப்புறம் ஒண்ணும் செய்யமுடியாது.. நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்..அது அவன் போட்டிருந்த செருப்புக்கு பொறுக்கவில்லை..படக் என்று ஒரு செருப்பு அறுந்து..காலைவாரியது..ச்சே..நேரம் கெட்ட நேரத்திலே..இதுவேற உயிரைவாங்குது..இப்போ செருப்பா முக்கியம்..ம்..இரண்டு […]