• February 7, 2025

கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலைய காய்கறி மார்க்கெட்டில்  வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது

 கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலைய காய்கறி மார்க்கெட்டில்  வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது

கோவில்பட்டி நகராட்சி சந்தையில் உள்ள கடைகள் இடிக்கபட்டு புதிதாக 250 கடைகளுடன் புதிய சந்தை கட்டப்படுகிறது. அதுவரை கூடுதல் பஸ் நிலையத்தில் சந்தை இயங்கும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து தகர கொட்டகை கடைகள் அமைக்கப்பட்டன.

ஆனால் காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூடுதல் பஸ் நிலையத்துக்கு மாறமாட்டோம் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்கள். மேலும் தெற்கு திட்டங்குளம்  முத்து நகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தாமான இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் தொடங்கினார்கல். மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் 100 வரை உருவாகி விட்டன,

அதே சமயம் கூடுதல் பஸ் நிலையத்திலும் சில வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் தொடங்கினார்கள். மேலும் சிலர் மார்க்கெட் ரோட்டில் உள்ள மளிகை கடை, முட்டைக்கடை போன்றவற்றின் முன்புறத்தில் காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும் சந்தைப்பேட்டை அருகே மெயின் ரோட்ட்டில் சில மொத்த காய்கறி மற்றும் மளிகை கடை உருவாகி விட்டது.

இந்த நிலையில் தெற்கு திட்டங்குளம் பகுதியில் உருவான காய்கறி மார்க்கெட் செயல்பட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தடை விதித்தார். இதனால் இன்று முதல் அங்குள்ள கடைகள் காலவரையின்றி மூடப்பட்டன. உரிய அனுமதி பெற்று கடைகளை மீண்டும் திறந்து வியாபாரம் செய்வோம் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இதனால் கோவில்பட்டி நகராட்சி சார்பில் கூடுதல் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக தினசரி சந்தையில் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகள் வாங்கி செல்கிறார்கள்.

விவசாயிகள் கொண்டு வரும் பொருள்களை கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்…

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *