கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவருக்கு சிறந்த அறிவியல் படைப்புக்கான விருது
![கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவருக்கு சிறந்த அறிவியல் படைப்புக்கான விருது](https://tn96news.com/wp-content/uploads/2023/04/794a9f75-8172-4ca8-a4b2-2fdea3a092fe-850x560.jpg)
தூத்துக்குடி மாவட்ட வானவில் மன்றத்தின் சார்பில் அறிவியல் படைப்புக்கான போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்,. அவர்களில் ஒருவரான கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர் வீரமணிகண்டன் உபயோகமற்ற பொருட்களிலிருந்து எளிய முறையில் டார்ச்லைட் தயார் செய்து காட்டினார். இதையொட்டி மாவட்ட அளவில் மாணவர் வீரமணிகண்டன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/04/725a82f5-08ae-4976-bf1b-c4d05fdf1c2f-512x1024.jpg)
இதையொட்டி மாணவர் வீரமணிகண்டனை கோவில்பட்டி ரோட்டரி சங்கம் பாராட்டி சிறந்த அறிவியல் படைப்புக்கான விருதினை வழங்கியது. கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் தலைமை தாங்கினார்..ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் (தேர்வு) முத்துச்செல்வன்,ரோட்டரி சங்க உறுப்பினர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியை மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் வீர மணிகண்டனுக்கு சிறந்த அறிவியல் படைப்புக்கான விருதினை வழங்கி பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன், ஆதவா தொண்டு நிறுவன ஆசிரியை உஷா உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை மீனா நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)