ஓட்டப்பிடாரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் தூத்துக்குடி நகர்கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒட்டப்பிடாரம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா , யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்கள்.. மேலும் மின்வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்..
இந்நிகழ்வில் மேற்பார்வை பொறியாளர் .குருவம்மாள், செயற்பொறியாளர் .ராம்குமார், உதவி செயற்பொறியாளர் .சுடலைமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.