• November 14, 2024

Month: March 2023

தூத்துக்குடி

15 பேருக்கு கலை விருதுகள்; பொற்கிழி,பட்டயங்களை  ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்குகிறார்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட கலைமன்றத்தின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்டஅளவில் அகவைமற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள்,விருதுகள் வழங்கிடத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.  இவ்விருதுகளைதமிழ்நாட்டின் கலைப் பண்புகளைமேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனைசிறப்பிக்கும் வகையிலும் மாவட்டஆட்சியர் செந்தில்ராஜ்  தலைமையில் செயல்பட்டுவரும் மாவட்டக் கலைமன்றங்களின் வாயிலாக 2021-2022ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்துகலைஞர்களுக்கு கலைவிருதுகள் வழங்கிடஅரசுஆணையிடப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க, தூத்துக்குடி மாவட்டஆட்சியர் .கி.செந்தில்ராஜ்;,  தலைமையில் நடைபெற்றதேர்வுக் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இன்று மாலை பா. ஜனதா பொதுக்கூட்டம்; எச். ராஜா பேசுகிறார்

  கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள வாஜ்பாய் திடலில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு பா. ஜனதா அரசின் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடக்கிறது.   மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன்  தலைமையில்  மூத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர்  எச். ராஜா சிறப்புரை ஆற்றுகிறார்.   கூட்டத்தில் பா. ஜனதா மாவட்ட பொது செயலாளர்கள் வேல்ராஜ், சரவண கிருஷ்ணன், கிஷோர், நகர தலைவர் சீனிவாசன், கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் […]

செய்திகள்

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை; அண்ணா பிறந்தநாள்

தமிழ்நாடு சட்டசபை யில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் இன் றைய தினம் தொடங்கும் என சில வாரங்களுக்கு முன்பே சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதையடுத்து பட்ஜெட் தயாரிப்புப்பணிகளில் அரசு இறங்கியது. பொதுவாக ஒரே பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு பொதுபட்ஜெட் டும், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முதலில் பொது பட்ஜெட் டும், மறுநாளில் வேளாண் பட்ஜெட்¬டும் தாக்கல் […]

செய்திகள்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா

சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி பா.ஜ.க.சார்பில் மீண்டும் மனு

கோவில்பட்டி  கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் ஈபி காலனி அடிப்படை வசதியான குறுக்கு தெரு சாலை வசதி வாறுகால் வசதி, காசி அம்மன் கோவில் முதல் பானு ஸ்டோர் வரையிலான வாறுகால் மற்றும் சாலை வசதி கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமர்ப்பித்தும் இது நாள் வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.ஊராட்சி ஒன்றியமும் மந்த நிலையில் உள்ளது இதனால்  இன்று மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் பாலு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நவீன வசதிகள்; அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

மத்திய அரசின் சார்பில் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1000 சிறிய ரெயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ரெயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் தொழில் முனைவோர் வர்த்தக இணைப்பு கூட்டம்

கோவில்பட்டி ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம். , வர்த்தகஇணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. இந்த அமைப்பின் சார்பில் கோவில்பட்டிஜே.சி.பவன் கட்டிடத்தில் தொழில் முனைவோர் வர்த்தக இணைப்பு  கூட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவர் டி.தீபன்ராஜ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். ஜே.சி.ஐ. மண்டல தலைவர் என்.கார்த்திக், மண்டல ஜே.காம் சேர்மன் எஸ்.ராதாகிருஷ்ணன், தலைமை பயிற்சியாளர் எம்.அருண்குமார்ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில் ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொழில்அதிபர்கள் என்.ராஜவேலு, ராஜ்குமார் பங்கேற்றனர். கூட்டத்தில் மாடர்ன் ஹார்டுவேர்ஸ்,  கைரா டெக்னாலஜிஸ், ஈஸ்வரிபிளைவுட்ஸ், கணேஷ் பேக்கரி,, சிவசக்தி பைப் டிரேடர்ஸ், ஆர்.ஜே.டெக் கம்ப்யூட்டர்ஸ், கார்முகில் இன்போடெக்,எஸ்.எம்.சிக்னல்ஸ் […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுசெயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டும் மனு தாக்கல்; முடிவை அறிவிக்க

 அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 17-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலை நடத்தும் ஆணையாளர்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.  அவர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந் தேதி (நேற்று முன்தினம்), 19-ந் தேதி (நேற்று) மதியம் 3 மணி வரை நடைபெறும் என்றும் […]

கோவில்பட்டி

மதுபோதையில் தகராறு: கட்டிட தொழிலாளி  வெட்டிக்கொலை

கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரியில் கட்டிட தொழிலாளி பெரிய மாரியப்பன்(வயது 55) என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(40) என்பவரும் மது அருந்திகொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் மது அருந்தியபடியே பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.. மது போதையில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரிவாளால் வெட்டிக்கொண்டனர், இதில் பெரிய மாரியப்பன் அறிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை

பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். நேற்று பிரதோஷம். இதனால் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. அதன்படி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்  உடனுறை பூவணநாத சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.  சிவன் சன்னதிக்கு எதிர்புறம் இருக்கும் நந்தியம்பெருமானுக்கு  வெவ்வேறு விதமான அபிஷேகங்கள் நடந்தன. அதை […]