கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் தொழில் முனைவோர் வர்த்தக இணைப்பு கூட்டம்
கோவில்பட்டி ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம். , வர்த்தக
இணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. இந்த அமைப்பின் சார்பில் கோவில்பட்டி
ஜே.சி.பவன் கட்டிடத்தில் தொழில் முனைவோர் வர்த்தக இணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவர் டி.தீபன்ராஜ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். ஜே.சி.ஐ. மண்டல தலைவர் என்.கார்த்திக், மண்டல ஜே.காம் சேர்மன் எஸ்.ராதாகிருஷ்ணன், தலைமை பயிற்சியாளர் எம்.அருண்குமார்
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில் ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொழில்
அதிபர்கள் என்.ராஜவேலு, ராஜ்குமார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாடர்ன் ஹார்டுவேர்ஸ், கைரா டெக்னாலஜிஸ், ஈஸ்வரி
பிளைவுட்ஸ், கணேஷ் பேக்கரி,, சிவசக்தி பைப் டிரேடர்ஸ், ஆர்.ஜே.டெக் கம்ப்யூட்டர்ஸ், கார்முகில் இன்போடெக்,
எஸ்.எம்.சிக்னல்ஸ் ட்ராபிக், டி.எஸ்.டெக். ஸ்மார்ட் ஹோம் ஆட்டோமேஷன், கே.வி.பி. ஸ்டீம் அயன்- டிரை வாஷ், உதயா பிசியோ கேர், அந்தோணி
போடோகிராப்பி, ஜி கம்யூட்டர்ஸ்-ஜி ஸ்போக்கன்
இங்கிலிஸ், சபிதா உமன்ஸ் மாடலிங் டிசைனர், ஹர்சி ட்ரெண்ட்ஸ், ஐஸ்வர்யா ஆரி ஒர்க்ஸ், வாவ் பிரைட்ஸ், ஹை டெக் பியூட்டி பார்லர், ஜூம்பா வெயிட்லாஸ் சென்டர், இன்கார்ப் கம்யூட்டர்ஸ், உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட
நிறுவனங்களை நடத்தும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது புதிதாக 4 பேர் ஜே.சி.ஐ.உறுப்பினர்களாக சேர்ந்தனர், அவர்கள்
பதவிபிரமாணம் செய்துகொண்டபின் உறுதிமொழி ஏற்றனர்,
இதை தொடர்ந்து ஜே.காம். மண்டல தலைமை பயிற்சியாளர் எம்.அருண்குமார்
சிறப்புரை ஆற்றினார். அவர் முதலில் கூட்டத்தில் பங்கேற்ற தொழில் முனைவோர்
ஒவ்வொருவரையும் சுயஅறிமுகம் செய்து கொள்ள வைத்தார்.
பின்னர் அருண் குமார் , ஜே.காம்.வர்த்தக இணைப்பு பற்றி விளக்கினார். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள உறுப்பினர்கள் மூலம் வர்த்தகம் பெருகி வருகிறது,. கடந்த ஆண்டு 21 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது,. ஜே.காம்.
உறுப்பினர்களுக்கு உள்ளேயே வர்த்தகம் நடந்து விடும். ஒருவருக்கொருவர் தங்கள்
வர்த்தகத்தை பெருக்கி கொள்ள ஜே.காம் பெரும் உதவியாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இயக்கத்தில் சேரும் உறுப்பினர்களுக்கு தனி மனித மேம்பாடு கிடைக்கும். வாரந்தோறும் கூட்டம் நடத்தி பயிற்சி அளிக்கப்படும், இதன் மூலம் உங்கள் வியாபாரத்தை முன்னேற்றம் அடைய செய்ய வழி காணலாம் என்றும்
அவர் சொன்னார்..
இதை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் தங்கள் நிறுவன செயல்பாடு, தயாரிப்பு விவரங்கள் பற்றி எடுத்து கூறினார்கள்
கோவில்பட்டி கைரா டெக்னாலஜிஸ் நிறுவனர் எம்.செல்வலட்சுமி
பேசுகையில்,” வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நாங்கள் டிஜிட்டல் விளம்பரம் செய்து கொடுத்து வருகிறோம். ஒரு ஆண்டுக்கு முன்பாக கோவில்பட்டியில் நம்ம ஊர் மக்களுக்காக தொடங்கி குறைந்த கட்டணத்தில் சமூக வலைதளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் விளம்பரம் செய்கிறோம். உங்கள்
தொழில் மற்றும் வர்த்தகம் அதிக மக்களை சென்றடைந்து வியாபாரம் பெருக செய்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.தலைவர் டி.தீபன்ராஜ்,
மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். துணை செயலாளர் அருண் பிரசாத் திட்ட இயக்குனராக செயல்பட்டு முடிவில் நன்றி கூறினார்.