சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் அன்னதானமும் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழக அரசு தாக்கல் செய்த வேளான் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளின் மன குமுறலை எடப்பாடி பழனிசாமி வெளிபடுத்தியுள்ளார். வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரையில், அரைத்த மாவையே அரைத்தது போல் உள்ளது. விவசாய […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளராக எஸ்.ஆர்.பாஸ்கரன் மீண்டும் தேர்வு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்ட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது அனைத்து மாவட்ட செயலாளர்களும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்,. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ்.ஆர்.பாஸ்கரன் மீண்டும் அந்த பொறுப்பை தொடர தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சரத்குமாரை எஸ்.ஆர். பாஸ்கரன் சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து பெற்றார். .மீண்டும் தூத்துக்குடி வடக்கு […]
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் நெல்லை சிப்காட் நிலஎடுப்பு தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் சந்திரன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினரின் வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்து கோர்ட்டில் அனுமதி பெற்றனர். நேற்று […]
காவல்துறையில் பயன்படுத்தி கழிக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்; 29-ந்தேதி தூத்துக்குடியில் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- “தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 29.3.2023 புதன்கிழமை காலை 10.மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. மேற்படி ஏலம் விடப்பட உள்ள […]
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (வயது 38) என்பவர் எட்டையாபுரம் காவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பாரத் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் இருந்ததால், பின்னால் இருந்தவரை ஆசிரியர் பாரத் அந்த மாணவனை முன்னால் வந்து உட்காரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் முன்னால் வரும் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பா.ஜனதா சார்பாக நேற்று மாலை கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகில் வாஜ்பாய் திடலில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் மூத்த தலைவர் எச் ராஜா சிறப்புரையாற்றினார் . அவர் பேசுகையில் கூறியதாவது:- முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி, கட்சி , குடும்பத்தில், கட்டுப்படவில்லை,திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்,தமிழக […]
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், கிருஷ்ணன் கோவில் திடலில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று மாலைகாரில் வந்தார். அவர் மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, கூட்டத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், விருதுநகர் மாவட்ட […]
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது எச்.ராஜா கூறியதாவது:- தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி என்று அனைவருக்கும் தெரியும். தற்போது அவர்களுக்குள்ளேயே வன்முறை கலாச்சாரத்தை கையாளுகின்றனர். திருச்சி சிவாவால் அவரது வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. நேருவின் தம்பிக்கு நடந்தது போல் சிவாவுக்கும் நடக்குமோ என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் ஒரு பா.ஜ.க.காரர் கூட உயிரோடு இருக்க முடியாது […]
நாடு முழுவதும் மார்ச் 22 ம்தேதி தண்ணீரின் அவசியம் ,நீரினை சேமிக்கும் முறை, தண்ணீர் சிக்கனம் குறித்தும் விழிப்புணர் ஏற்படுத்தும வகையில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டி இன்று கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நகராட்சி ஆகியவை சார்பில் உலகதண்ணீர்தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது கோவில்பட்டி நாடார் நடுநிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி மாணவர்கள் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஓவியம் வரைந்து கண்காட்சியில் மாணவர்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். பல்வேறு […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்த கல்லூரியில் அவ்வப்போது அடிப்படை வசதிகளில் குறை ஏற்பட்டு வருகிறது. தற்போது மோட்டர்கள் பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இல்லை. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மாணவ – மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவறைகளில் தண்ணீர் பயன்பாடு இல்லாததால் அசுத்தமாக காட்சி அளிக்கிறது,. எனவே உடனடியாக […]