• November 14, 2024

காவல்துறையில் பயன்படுத்தி கழிக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்; 29-ந்தேதி தூத்துக்குடியில் நடக்கிறது

 காவல்துறையில் பயன்படுத்தி கழிக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்; 29-ந்தேதி தூத்துக்குடியில் நடக்கிறது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:-

 “தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 29.3.2023 புதன்கிழமை காலை 10.மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம்  நடைபெற உள்ளது. 

மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 28.3.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 28.3.2023 அன்றே ரூபாய் 2000/- முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ரூ.18% முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான விவரங்களுக்கு 9443382974, 9498196359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

 இவ்வாறு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *